Connect with us
simbu selva

Cinema History

போட்டி போட்டு கடுப்பேத்திய சிம்பு – செல்வராகவன்.. கான் படம் டிராப் ஆனதன் பின்னணி இதுதான்..

தமிழ் திரையுலகில் சில கூட்டணி இணையும் போது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால், சில சமயம் அது நடக்காமல் போய்விடும். தமிழ் திரையுலகில் அசத்தலாக படங்களை எடுக்கும் இயக்குனராக பார்க்கப்பட்டவர்தான் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்தமகன். நடிகர் தனுஷின் அண்ணன்.

தம்பி தனுஷை வைத்து இவர் இயக்கிய முதல் படம் துள்ளுவதோ இளமை. கிளுகிளுப்பான காட்சிகள் இருந்த படம் இளசுகளுக்கு பிடித்துப்போனதால் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் முக்கிய காரணமாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் இப்போதும் யுவன் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.

இதையும் படிங்க: அஜித் வீட்லயும் பார்ட்டி!.. குடிச்சிட்டு விஜய் பாட்டு பத்தி புலம்புனாரு!.. சுசித்ரா அட்டாக்!..

இந்த படத்திற்கு பின் தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களால் செல்வராகவனுக்கு ரசிகர்களும் உண்டானார்கள். ஏ.எம்.ரத்னம் மகன் ரவியை வைத்து செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி படமும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படமும் அவர் எந்த மாதிரியான இயக்குனர் என திரையுலகினருக்கு காட்டியது. ஒருகட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் ஓடவில்லை என்பதால் இப்போது நடிகராக மாறிவிட்டார். 10 வருடங்களுக்கு முன்பு தனது தம்பி தனுஷின் போட்டி நடிகராக கருதப்படும் சிம்புவை வைத்து கான் என்கிற படத்தை துவக்கி ஆச்சர்யம் கொடுத்தார் செல்வராகவன்.

இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…

ஆனால், அறிவிப்போடு அந்த படம் நின்றுபோனது. அதற்கு என்ன காரணம் என இதுவரை செல்வராகவனும், சிம்புவும் சொல்லவில்லை. இந்நிலையில்தான் இதுபற்றி தகவல் இப்போது வெளியே கசிந்திருக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய முதல் இரண்டுநாள் சிம்பு வரவில்லையாம். அதன்பின் சிம்பு 2 நாள் சரியாக வந்திருக்கிறார். ஆனால், செல்வராகவன் வரவில்லை.

இதில், கடுப்பான தயாரிப்பாளர் படமே வேண்டாம் என டிராப் செய்துவிட்டாராம். சிம்புவை போலவே சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி என்கிற படத்தை துவங்கினார். ஆனால், 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த படமும் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top