More
Categories: Cinema News latest news

விஜய்க்கு நோ!. ரஜினி படம்னா ஓகே!. கமல் – சூர்யா முடிவுக்கு பின்னால் இருக்கும் பஞ்சாயத்து இதுதான்!..

இரண்டு மூன்று நடிகர்கள் இணைந்து நடிப்பது என்பது ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் அதிகம் பார்க்க முடியும். ஆனால், தமிழ் சினிமாவில் அது அரிதிலும் அரிது. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து அது அப்படித்தான். தன்னுடைய படத்தில் தான் மட்டுமே ஹீரோ என அவர்கள் நினைத்தார்கள். இப்போது வரை அது தொடர்கிறது.

துவக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிப்போம் என பேசி முடிவெடுத்து தனித்தனி பாதையில் சென்றனர். ஆனால், அதே ரஜினி பாலிவுட்டுக்கு போய் அமிதாப்பச்சனோடு சேர்ந்து நடித்தார். ஆனால், தமிழில் யாருடனும் இணைந்து நடிக்க மாட்டார். ஜெயிலர் படத்தில் சிவ்ராஜ்குமாருக்கும், மோகன்லாலுக்கும் கிடைத்தது சில நிமிடங்கள் மட்டுமே வரும் கேமியோ வேடம்தான்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஃபிரண்ட்ஸ் படத்தில் நடந்த கொடுமை!. விஜய் மீது இப்போதும் கோபத்தில் இருக்கும் சூர்யா!..

விக்ரம் படத்தில் பஹத் பாசில் வந்தது போல் ஒரு வேடம் ஜெயிலர் படத்தில் இருந்திருந்தால் அவர் ஏற்றிருக்க மாட்டார். அதை தவறு என சொல்லவும் முடியாது. அது அவரின் விருப்பம். இந்த படத்தில் ரஜினியின் மகன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் நெல்சன் மூலம் ரஜினிக்கு தூதுவிட்டார். ஆனால், வேண்டாம் என சொல்லிவிட்டார் ரஜினி.

விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்து கலக்கினார் சூர்யா. ஏனெனில் அது கமலுக்காக செய்தது. ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்தில் ரோலக்ஸாக நடிக்க சொன்னால் சூர்யா நிச்சயம் நடிப்பார். அதேபோல், ஒரு கேமியோ வேடம் செய்யுங்கள் என லோகேஷ் கேட்டால் கமலும் கூட தனது நண்பர் ரஜினிக்காக அதை செய்வார்.

இதையும் படிங்க: சந்திரமுகி பார்ட் 1 வேட்டையனிடம் ஆசி வாங்கிய சந்திரமுகி 2 வேட்டையன்!.. வைரலாகும் புகைப்படங்கள்!..

ஆனால், விஜய் என்றால் நடிக்க மறுப்பார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. தன்னை விட அதிக ரசிகர்கள், அதிக ஹிட், அதிக சம்பளம் என விஜய் இருந்தாலும் சூர்யாவும் ஒரு ஹீரோவாகத்தான் வலம் வருகிறார். ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்த போது சூர்யாவின் சில காட்சிகளை வெட்ட சொன்னார் விஜய். அது சூர்யாவை அப்போது அப்செட் ஆக்கியது. இப்போது சூர்யாவும் வளர்ந்துவிட்டார். எனவே விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை.

அதேபோல், லியோ படத்தை கமல் தயாரிக்க ஆசைப்பட்டு லோகேஷ் மூலம் தூதுவிட விஜயோ மறுத்துவிட்டார். எனவேதான், லியோ படத்தில் சூர்யாவும், கமலும் கேமியோ வேடத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இங்கு எல்லாமே ஒரு கணக்குதான். அவரவர் நடந்து கொள்வதற்கு ஏற்றது போல் எதிர்வினை இருக்கும்.

இதையும் படிங்க: கேப் விடாம அடிச்சா எப்புடி… வாயவே திறக்கவிட கூடாது… வெங்கட் பிரபுவை லாக் செய்த தளபதி!

Published by
சிவா

Recent Posts