வேற கதையே இல்லையா?!. ஓடிப்போ!.. ரஜினி, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த இயக்குனர்!..

சில இயக்குனர்கள் ஒரே வகையான கதைகளை இயக்குவார்கள். சில இயக்குனர்கள் மட்டுமே ஒரு ஃபார்முலாவுக்குள் சிக்காமல் வெவ்வேறு வகையான கதைகளை இயக்குவார்கள். பாரதிராஜா துவக்கத்தில் கிராமிய படங்களை மட்டுமே எடுத்து வந்தார். அவரால் அது மட்டுமே முடியும் என சிலர் பேசியதில் கோபமடைந்து அவர் இயக்கிய படம்தான் சிகப்பு ரோஜாக்கள்.

அதேபோல் டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி, கொடி பறக்குது, கேப்டன் மகள் உள்ளிட்ட பல படங்களையும் அவர் இயக்கினார். அதேபோல்தான் மணிரத்னமும். காதல் கதைகளை மட்டும் எடுக்காமல் ரோஜா, பம்பாய் போன்ற நாட்டுப்பற்றுள்ள படங்களையும் இயக்கினார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பெரிய சம்பவம் செய்யப்போகும் தளபதி!. முதல்வரை சந்திச்சதுக்கு காரணம் இதுதானாம்!.

நாயகன் படத்தில் புதுமாதிரியான கதையை இயக்கினார். ஒரு வயது சிறுமியை வைத்து அஞ்சலி படத்தை இயக்கினார். பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தார். இப்படி எந்த ஃபார்முலாவுக்குள்ளும் சிக்காதவர் அவர். இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் முதன் படமான பீட்சா மட்டுமே புதுமாதிரியான கதையாக இருந்தது.

karthick

ஆனால், அதன்பின் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் கேங்ஸ்டர் கதைதான். ஜிகர்தண்டா, மகான், ஜகமே தந்திரம், பேட்டை, ஜிதர்தண்டா டபுள்க் எக்ஸ் என எல்லாமே கேங்ஸ்டர் படங்கள்தான். கோட் படத்திற்கு பின் விஜய் கதை கேட்ட இயக்குனர்களில் கார்த்திக் சுப்பாராஜும் ஒருவர்.

இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதானா? புதுசா இருக்கு தல இதெல்லாம்…

புதுசாக எதாவது ஒரு கதை சொல்வார் என விஜய் எதிர்பார்த்த நிலையில் அவரிடம் கார்த்திக் சுப்பாராஜ் சொன்னது ஒரு கேங்ஸ்டர் கதை. எனவே, ‘தம்பி அப்புறம் பார்ப்போம்’ என சொல்லி விஜய் அனுப்பிவிட்டார். அதேபோல், தர்பார் படத்துக்கு பின் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்பட்ட ரஜினி கார்த்திக் சுப்பாராஜை அழைத்து கதை கேட்டார்.

ரஜினியிடம் அவர் சொன்னதும் ஒரு கேங்ஸ்டர் கதைதான். எனவேதான், அவரை விட்டுவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார் ரஜினி. கேங்ஸ்டர் கதையை விடாததால் ரஜினி மற்றும் விஜய் என இருவரையும் இயக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

 

Related Articles

Next Story