தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். குறிப்பாக நடிகர் கமலுடன் இவர் நடித்த தேவர் மகன், குருதிப்புனல், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. நாசருக்குள் இருந்த ஒரு சிறப்பான நடிகரை ரசிகர்களுக்கு காட்டியவர் கமல்தான் என்றால் இதை நாசரே மறுக்கமாட்டார்.
சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் நாசர் நடித்துள்ளார். குறிப்பாக பாகுபலி படத்தில் அவர் ஏற்ற சகுனி வேடம் சிறப்பாக இருந்தது. சீரியஸ் மட்டுமின்றி பல படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்துள்ளார்.
பாலச்சந்தர் இவரை தனது படங்களில் நடிக்க வைத்தார். அப்படித்தான் கமலுடன் நெருங்கி பழகினார். நாயகன் படத்தில் நாசர் ஏற்ற போலீஸ் வேடமும் அவரை ரசிகர்களிடமும் நெருக்கமாக்கியது. அதன்பின்னர் தான் தொடர்ந்து நடிக்க துவங்கினார். சினிமாவில் நடிப்பதற்கு முன் நிறைய நாடகங்களில் நாசர் நடித்துள்ளார். ஏனெனில், இவர் வறுமையான குடும்பத்திலிருந்துதான் வந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாசர் ‘நான் நாடங்களில் நடிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தது. முதலில் ஆடை. என்ன வேஷம் கொடுப்பார்களோ அந்த உடையை நமக்கு கொடுப்பார்கள். இரண்டாவது நம்மை நன்றாக தூங்கவிடுவார்கள். மூன்றாவது காரணமாக நாசர் சொன்னதுதான் இதில் ஹைலைட். 20 பட்டர் பிஸ்கெட்டுகள் அதிகமாக தருவார்கள். இந்த 3 காரணங்களால்தான் நான் நாடகத்தில் நடிக்கவே துவங்கினேன்’ என நாசர் கூறியுள்ளார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…