அஜித் - விஜய் சேர்ந்து நடிச்சும் ஓடாத படம்!.. பல வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்...
சினிமாவில் வளரும்போது பல நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் வளந்த பின் அப்படி நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அவ்வளவு நெருக்கமாக இருந்தும் கூட அவர்கள் ஒன்றாக நடித்தது ‘கூண்டுக்கிளி’ என்கிற ஒரே படம்தான்.
அதேநேரம் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற சில நடிகர்கள் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார்கள். அவர்களுக்கு பின் கமலுடன் பல படங்களிலும் இணைந்து நடித்தார் ரஜினி. ஆனால், ஒருகட்டத்தில் இருவரும் தனியாக நடிக்க துவங்கினார்கள். அதன்பின் இப்போது வரை ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவே இல்லை. இனிமேலும் அது நடக்க வாய்ப்பில்லை.
இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…
ரஜினி - கமலுக்கு பின் வந்தவர்கள்தான் விஜய் - அஜித். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம்தான் ராஜாவின் பார்வையிலே என்கிற படம். 1995ம் வருடம் இப்படம் வெளியானது. இப்படத்தை ஜானகி சௌந்தர் என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எனவே, அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கும். இந்த படத்தில் அஜித்தின் நண்பனாக விஜய் நடித்திருப்பார். ஆனால், அஜித்திற்கு காட்சிகள் குறைவுதான். ஆனாலும், அழுத்தமாக இருக்கும். ஆனாலும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய வெற்றிபெறவில்லை.
இதையும் படிங்க: என்னை ஜெயிக்க அவராலதான் முடியும்!.. ரஜினி சொன்ன அந்த ஹீரோ யார் தெரியுமா?..
சமீபத்தில் ஜானகி சௌந்தர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது ராஜாவின் பார்வையிலே படம் ஏன் வெற்றிப்படமாக அமையவில்லை என்பது பற்றி பேசினார். ‘அந்த படத்தை வியாபாரம் செய்யும் போது சில தவறுகளை செய்துவிட்டேன். அந்த படத்தை 67 லட்சத்தில் எடுத்தேன்.
முதலீட்டில் 85 சதவீதம் எனக்கு வந்துவிட்டது. அந்த படத்தின் தொலைக்காட்சியை அவசரப்பட்டு வெறும் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். 6 மாதங்கள் கழித்து 60 லட்சம் ரூபாய்க்கு கேட்டார்கள். அதனால்தான் அந்த படம் எனக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. ஆனாலும், அந்த படம் எனக்கு முக்கியமான படமாகும்’ என சொல்லி இருந்தார்.