லியோ படத்தில் நடிக்க சஞ்சய் தத் ஒப்புக்கொண்டது ஏன் தெரியுமா?!.. இப்படி ஒரு காரணமா?!..
முன்பெல்லாம் பாலிவுட் படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தமிழ்நாட்டிலும் வெளியாகும். மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு படங்களும் அப்படித்தான். சில வருடங்களுக்கு முன் திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஷாருக்கானும், மோகன்லாலும், ஜாக்கிச்சானும், சிரஞ்சீவியும் தமிழ் பேசியது அப்படித்தான். அதேபோல், தமிழ் படங்களும் வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
கடந்த சில வருடங்களாக பேன் இண்டியா மூவி என பலரும் சொல்ல துவங்கியுள்ளனர். அதாவது, தெலுங்கில் உருவாகும் ஒரு படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும். பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் அப்படித்தான் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் கூட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
எனவே மலையாளத்திலிருந்து ஒரு ஹீரோ, கன்னடத்தில் இருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு ஹீரோ, பாலிவுட்டிலிருந்து ஒரு ஹீரோ அனைவரையும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்து படங்கள் உருவாக்கபடுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர்.
சஞ்சத் இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடித்தது கிடையாது. ஆனால், லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் இருக்கிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் தெறி. இப்படத்தில் சாலையில் பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகளிடம் விஜய் ஒரு அதிரடி சண்டை போடுவார். இந்த வீடியோ வடமாநிலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மற்றும் பகிரப்பட்ட பேஸ்புக் ரீல்ஸ் வீடியோவாக இருக்கிறது. ஹிந்தி பேசும் வட மாநிலத்தில் இதுவரை எந்த பேஸ்புக் ரீல்ஸ் வீடியோவும் இந்த அளவுக்கு பார்க்கப்பட்டதாகவோ, பகிரப்பட்டதாகவோ சாதனை இல்லை. அதனால்தான், விஜய் படம் என்றதும் இப்படத்தில் நடிக்க சஞ்சய்தத் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அயோத்தி கதை திருடப்பட்டது இப்படித்தான்… பிரபல திரைக்கதை ஆசிரியர் சொன்ன அதிர்ச்சி தகவல்…