அமீர் விஷயத்தில் சூர்யா மௌனமாக இருப்பதற்கு காரணமே இதுதான்!.. போட்டு உடைத்த பிரபலம்...

by ராம் சுதன் |
அமீர் விஷயத்தில் சூர்யா மௌனமாக இருப்பதற்கு காரணமே இதுதான்!.. போட்டு உடைத்த பிரபலம்...
X

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜெய் பீம்,சூரரைப்போற்று போன்ற படங்கள் வெற்றியை கொடுத்தால் தமிழ் சினிமாவில் அவரின் இடத்தை தக்க வைக்க முடிந்தது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ”கங்குவா” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படம் பத்து மொழிகளில் பீரியாடிக் படமாக உருவாகி வருகிறது. படத்தின் அவ்வப்போது வெளிவரும் முன்னோட்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் சூரரைப்போற்று கூட்டணி தொடர உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: என் இயக்கத்தில் ரஜினி நடிக்க வேண்டியது!. மிஸ் ஆனது இதனால்தான்!.. அமீர் சொன்ன அதிர்ச்சி தகவல்!..

இப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்க உள்ளது. ஒருபக்கம், பருத்திவீரன் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சூர்யா குடும்பத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு இன்று வரை அவர் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சினிமா விமர்சகர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஞானவேல் மற்றும் அமீர் இடையேயான பிரச்சனைக்கு சூர்யாவின் ஈகோ தனம் தான் இன்று வரை மௌனம் காக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான் திருடனா?!.. என் மகனுக்கு என்ன பதில் சொல்றது?!. சிவக்குமாருக்கு அமீர் அனுப்பிய மேசேஜ்!..

நான் பார்த்த சூர்யா வேறு இப்போது இருக்கும் சூர்யா வேறு. நந்தா திரைப்படத்திற்கு அப்புறம் தான் அவரது சினிமா வாழ்க்கையே மாறியது. அன்று நான் அவரிடம் ஒரு நேர்காணல் ஒன்றிற்கு அனுமதி கேட்டபோது அவர் என் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் என்னுடன் அமர்ந்து பேசியது மட்டுமின்றி அந்த நேர்காணலையும் முடித்துக் கொடுத்தார்.

அன்று அவர் எளிமையின் மறு உருவமாய் இருந்த அவர் இன்று இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எந்தவித கருத்துகளையும் தெரிவிக்காமல் இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று கூறியுள்ளார் பிஸ்மி.

இதையும் படிங்க: வருத்தம் தெரிவிச்சா விட்ருவனா?!… அடங்காத கோபத்தில் அமீர் அடுத்து செய்யப்போவது இதுதானாம்!…

Next Story