Cinema News
விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….40 வருட நண்பர் சொன்ன தகவல்…
தமிழ்ப்பட உலகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் தன்னிகரற்ற தலைவராக உருமாறி விட்டார் விஜயகாந்த். அதிலும் அவர் இறந்தபிறகு நாளுக்கு நாள் அவரைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறாரா கேப்டன் என்ற ஆச்சரியமான செய்திகள் சமூகவலை தளங்களில் அவ்வப்போது உலாவி வருகின்றன.
அந்த வகையில் அவரைப் பற்றி சக நடிகர்கள், துணை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட மீடியா சார்ந்த பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பார்த்தசாரதியும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்கும்போதே நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படி இனி ஒரு நடிகர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு வராமல் நியூ இயர் பார்ட்டியில் குத்து டேன்ஸ்!.. அஜித்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…
40 வருடமாக கேப்டனுடன் பயணித்தவர் தேமுதிக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி. இவர் விஜயகாந்த் உடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். பார்க்கலாமா…
1989ல் எனக்கு திருமணம் செய்து வைத்தார். எனக்கு 2 மகன்கள். விஜயராஜ், யுவராஜ். பெயர் வைத்தது கேப்டன் தான். எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்க வைத்தது கேப்டன் தான். தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் மூலமாக இப்படிப் படிக்க வைத்தார். 87ல் ஸ்கூலுக்கு வந்து தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களுக்குக் கடிதம் கொடுத்தார். மே மாதம், ஜூன் மாதம் பள்ளிக் கட்டணம் செலுத்த மன்றத்தின் மூலம் உதவி செய்தார்.
இந்த உதவியானது மன்றத்தோடு மட்டும் நிற்காமல் கஷ்டப்பட்ட வெளி ஆள்களுக்கும் போய்ச் சேர்ந்தது. உதாரணமாக நாம் மதுரையில் மாட்டுத்தாவணியில் இருந்தால் அங்குள்ள மன்றத்தின் மூலமாக படிக்க வைத்தார் கேப்டன். என்னோட பசங்க வந்து அவர் மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க. தையல் மெஷின், காது கேளாதோர் கருவி, ஊனமுற்றோர் வண்டி என பல சிறப்பம்சங்களை தனது பிறந்தநாள் விழாவில் செய்தார்.
முதலில் பிறந்தநாளை கொண்டாட கேப்டனுக்கு விருப்பமில்லை. ஆனால், மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள் என்றால் நான் வருகிறேன் என சொல்லி பிறந்த நாளை கொண்டாட ஒத்துக்கொண்டார்’ என பார்த்தசாரதி கூறினார்.