எம்.ஆர்.ராதா சினிமாவுக்கு வந்ததன் பின்னணி!.. அவர் வாழ்வில் இப்படி ஒரு சோகமா?!...

mr radha
எம்.ஆர்.ராதா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அவரது கரகரப்பான குரலும், தலையை சிலுப்பி சிலுப்பி ஆட்டி அவர் பேசும் ஸ்டைலும்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் அவர். 80 வருடங்களுக்கு முன்பே பகுத்தறிவு சிந்தனைகளை சினிமாவில் பேசியவர் இவர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.ஆர்.ராதா.
இவரின் நாடகங்கள் எல்லாமே அப்போது பல எதிர்ப்புகளை சந்தித்தது. பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கடவுளை கிண்டலடிப்பது என ரவுண்டு கட்டி அடிப்பார் எம்.ஆர்.ராதா. எனவே, நாடகத்தை நடத்தக்கூடாது என பல எதிர்ப்புகள் வரும். ஆனால், தனது கொள்கையை கடைசி வரை எம்.ஆர்.ராதா விடவில்லை.

mr radha
இவர் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படத்தின் காட்சிகள் இப்போதும் சமூகவலைத்தளங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. நாட்டு நடப்பை அழகாக நக்கலடித்து, நையாண்டி செய்து எம்.ஆர்.ராதா பேசும் வசனங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நிஜவாழ்விலும் கெத்தாக வலம் வந்த நடிகர் இவர்.
இவரிடம் ஒருமுறை ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது என்ன சூழ்நிலையில் நீங்கள் சினிமாவுக்கு வந்தீர்கள்? என கேட்ட கேள்விக்கு பதிலளித்த எம்.ஆர்.ராதா ‘ நான் சிறுவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளையாகத்தான் இருந்தேன். பள்ளிக்கு போக மாட்டேன். துடுக்குத்தனமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் வறுமை எங்கள் குடும்பத்தை வாட்டியது. வீட்டில் சோறு இல்லை.
நாடக கம்பெனிகளில் மூன்று வேளை சோறு போடுவார்கள் என்பதால் அங்கு செல்ல துவங்கினேன். பாய்ஸ் கம்பெனி பலருக்கும் சோறு போட்டது. அந்த நிறுவனம்தான் பல கலைஞர்களை உருவாக்கியது. ஆனால், வளர்ந்து, வசதி வந்த பின் அதை யாரும் சொல்வதில்லை. ராயல் பேமிலி மாதிரி ஃபில்டப் பண்றானுங்க. கலைக்காக அவதாரம் எடுத்த மாதிரி பேசுவானுங்க. என்னை பொறுத்தவரை நாடக கம்பெனி சோறுதான் என்னை நடிகராக மாற்றியது. இதுதான் உண்மை’ என சொன்னார் எம்.ஆர்.ராதா.
இதையும் படிங்க: ஆத்தாடி இது உலக மகா கிளாமரு!.. டாப் கியர் போட்டு தூக்கும் கீர்த்தி சுரேஷ்…