ஜி.வி.பிரகாஷுக்கு இப்படி ஒரு க்யூட்டான தங்கச்சியா!... வைரலாகும் புகைப்படங்கள்....

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார். அதன்பின் பல திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் நடிகராகவும் அவர் மாறினார். தற்போதும் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இவருக்கு ஒரு தங்கை உண்டு. அவரின் பெயர் பவானி ஸ்ரீ. இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ. ரணசிங்கம் படத்திலும் பாவ கதைகள் எனும் ஆந்தாலஜி படத்திலும் பவானிஸ்ரீ நடித்துள்ளார்.
அதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வரும் விடுதலை படத்திலும் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பிகினி விட மோசம்… இணையத்தை அதிர வைக்கும் சமந்தாவின் கவர்ச்சி அட்டூழியம்!
ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.