10 மொழிகள்... சாதனை படைத்த பிரம்மாண்டமான வரலாற்றுப்படம்....! மிரட்ட வருகிறார் நடிகர் சூர்யா

Surya 42
தமிழ் பான் இந்தியா படங்களிலேயே நடிகர் சூர்யாவின் படம் புது சாதனை படைத்துள்ளது.
இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை. அந்த நிலையிலும் தென்னிந்திய திரை உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது சூர்யா 42 படம். சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். பீரியடு பிலிமாக பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. படத்தோட அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் மோஷன் போஸ்டரோட வெளியானது.

Surya 42
இந்தப் படத்தோட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தி உரிமை மட்டும் ரூ.100 கோடிக்குப் போயிருக்குது.
இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ள ஜெயந்திலால் கட்டாவின் பிரண்ட்ஸ் ஸ்டூடியோஸ் தான் இந்தி உரிமத்தை வாங்கியிருக்காங்க.
சேட்டிலைட் அண்டு டிஜிட்டல் ரைட்ஸ், தியேட்டரிகல் ரைட்ஸ், இந்திக்கான நெகட்டிவ் ரைட்ஸ்னு மொத்தமாக ரூ.100 கோடிக்கு வாங்கியிருக்காங்க.
தற்போது வரை சூர்யா 42 படம் தான் பான் இந்தியா படங்களிலேயே மிகப்பெரிய விலைக்கு போயிருக்கிற தமிழ்ப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. சூர்யா படங்களிலேயே இந்தி உரிமம் அதிக தொகைக்குப் பிசினஸ் ஆகியுள்ள படமும் இதுதான்.
அதிலும் இன்னும் படப்பிடிப்பு கூட முடிவடையாத நிலையில் இந்த சாதனையைப் படைத்துள்ளது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம் தான்.
ஏற்கனவே இந்தி சாட்டிலைட் மார்கெட்டில சூர்யாவோட படமும் நல்ல பிசினஸ் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப் படமும் ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.
கமலின் விக்ரம், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், துல்கர் சல்மான் நடிப்பில் சீத்தாராமன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 (ஏப்ரல் 2023 ரிலீஸ்) என பல படங்களை பென் ஸ்டூடியோஸ் தான் இந்தில வாங்கியிருக்காங்க.
கடந்த மாதம் தான் எண்ணூர் துறைமுகத்தில இந்தப் படத்தோட 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதில் சூர்யாவின் ஜோடியாக திசாபதானியன் நடிச்சிருந்தாங்க. முக்கியமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இந்தப் படம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது. 3டி பீரியாடிக் டிராமாவாகத் தயாராகி வரும் இந்தப் படத்தில் சூர்யா 5 முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளாராம்.
படத்தோட இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் ஏப்ரலுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமானது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் ஒரு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியை தற்போதைய கால கட்டம் வரையிலும் கொண்டு வரப்பட்டுள்ளது என படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் சொல்கிறார்.

Surya 42
தேவிஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிரம்மாண்டமான இந்தப் படத்தோட மோஷன் போஸ்டரில் கழுகு பறந்து வந்து சூர்யாவின் தோளில் வந்து அமர்கிறது. இதற்கான பிஜிஎம் தேவிஸ்ரீ பிரசாத்தின் கைவண்ணத்தில் செம மாஸாக வந்துள்ளது.