ஒரே மாதத்தில் கல்லா கட்ட காத்திருக்கும் ரெட் ஜெயண்ட்! கைவசம் இத்தனை பெரிய படங்களா?
Red Giant Movies: தமிழ்நாட்டில் படங்களை விநியோகம் செய்வது படங்களை தயாரிப்பது என மிகப் பெரிய வியாபாரத்தில் இறங்கி கல்லா கட்டி வரும் நிறுவனமாக முதலிடத்தில் இருப்பது ரெட் ஜெயன்ட் நிறுவனம். ஒரு படம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சென்று விட்டால் கண்டிப்பாக அந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும். ஒரு சின்ன படம் ஒரு பெரிய படம் ஒன்றாக வரும் நேரத்தில் பெரிய படம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு சென்று விட்டால் சின்ன படத்தின் நிலைமை அதோகதிதான்.
அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் ரெட் ஜெயண்ட் தான் வாங்கும் படத்தை ரிலீஸ் செய்து அதன் மூலம் பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகிறது. 2008 ஆம் வருடத்தில் விஜயை வைத்து குருவி படத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் இது வரைக்கும் பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒட்டுமொத்தமாக முடங்கிய லைக்கா நிறுவனம்! ‘இந்தியன் 2’ படத்துக்கும் இப்படி ஒரு பிரச்சினையா?
முதன் முதலில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல படங்களை தயாரித்தார். குருவி திரைப்படம் தான் அவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம். அதைத்தொடர்ந்து ஆதவன், ஏழாம் அறிவு போன்ற படங்களை தயாரித்தார். இந்த படங்களுக்கு பிறகு தான் அவர் நடிகராக அறிமுகமானார். தான் நடிக்கும் படங்களை அவரே தயாரித்து நடிக்கவும் செய்தார்.
அவர் தயாரித்து நடித்த படங்களான ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல், மனிதன், சரவணன் இருக்க பயமேன், கழகத் தலைவன் போன்ற படங்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த திரைப்படங்கள் ஆகும். கடந்த மூன்று வருடங்களாக பல படங்களை விநியோகம் செய்தும் வருகிறது. குறிப்பாக அதிக பட்ஜெட்டுகளில் உருவாகும் படங்களை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் விநியோகம் செய்து வருகிறது.
இதையும் படிங்க: ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகர்! வாய்ப்புகள் கிடைக்காததால் எப்படி ஆயிட்டார் பாருங்க..
இதனாலயே ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மீது ஒரு சில குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் தியேட்டர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மற்ற சின்ன சின்ன படங்களை ரிலீஸ் செய்ய விடுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் ஜூலை மாதத்தில் ரெட் ஜெண்ட் நிறுவனம் மூன்று பெரிய படங்களை ரிலீஸ் செய்ய இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் ராயன் திரைப்படம், கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம், பிரபாஸ் நடிப்பில் கமல் கேமியோ ரோலில் நடிக்க உருவாகி இருக்கும் கல்கி ஆகிய மூன்று திரைப்படங்களையும் ஒரு வார இடைவெளியில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்… பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?