ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்த சூப்பர்ஹிட் படங்கள்
தமிழ்த்திரையுலகில் பல பெரிய திரைப்பட நிறுவனங்கள் உள்ளன. இவை தயாரித்தாலே படம் ஹிட் என்று இருக்கும். அது மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. ஏவிஎம், மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, சிவாஜி புரொடக்ஷன்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், கவிதாலயா, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அவற்றில் ஒன்று ரெட் ஜெயண்ட் மூவீஸ். இந்நிறுவனம் படம் தயாரிக்கவும் செய்தது. அதே போல விநியோகஸ்தராகவும் உள்ளது. அந்த வகையில் தயாரித்த மற்றும் விநியோகிக்கும் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
விண்ணைத்தாண்டி வருவாயா
இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
2010ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம். சிலம்பரசன், திரிஷா நடிப்பில் பட்டையைக் கிளப்பிய படம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. கணேஷ், நாக சைதன்யா, கே.எஸ்.ரவிகுமார், ஜனனி ஐயர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள் கிளப்பின.
ஏழாம் அறிவு
இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துக் கலக்கிய படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். கமலின் மகள் சுருதிஹாசன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசை படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட். ஜானி ட்ரை துயென், அபினயா, அவினாஷ், தன்யா, அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மனிதன்
இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
2016ல் வெளியான படம். அகமது இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், ராதாரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ், மயில் சாமி, சங்கிலி முருகன், யார் கண்ணன், சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சர்தார்
இந்தப்படத்திற்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகஸ்தராக உள்ளது. பிஎஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கார்த்தி, ராஷி கன்னா, லைலா, முனிஸ்காந்த், முரளி ஷர்மா, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் உள்ள இந்தப்படமானது வரும் அக்டோபரில் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தியன் 2
இந்தப்படத்திற்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகஸ்தராக உள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கமலின் இந்தியன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இப்போது அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2 வெளியாக உள்ளது. தற்போது படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் கமலுடன், சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ராகுல் பிரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இந்தப்படம் 2023 சம்மருக்கு வெளியாக உள்ளது.