Amaran: வசூலை குவிக்கும் அமரன்!.. கங்குவா-க்கு வந்த சிக்கல்!.. 2 ஆயிரம் கோடிக்கு ஆப்புதானா!..

amaran
Amaran: அமரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னும் படத்தை பற்றி மக்கள் சிலாகித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்த்த அனைவரும் இன்னும் அந்த தாக்கத்திலிருந்து விடுபடவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சோசியல் மீடியாவை எப்போது பார்த்தாலும் அமரன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்களும் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் குறித்த வீடியோக்களும் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த அளவுக்கு அமரன் திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ஏழு நாட்களில் 82 கோடி தமிழ்நாட்டில் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதும் சூர்யா-தனுஷ்… இதுல இவங்க வேறயா?!… 2025 சுமார் தாறுமாறா இருக்கப்போது!…
கூடிய சீக்கிரம் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் படத்திற்கான வசூல் சாதனைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். அதே நேரம் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது.
ஆனால் படத்தை ரெட் ஜெயண்ட் வாங்கும் போது இந்த அளவு வெற்றி பெறும் என அவர்கள் நினைக்கவே இல்லையாம். படத்தின் வெற்றியை பார்த்து அந்த நிறுவனம் வாயடைத்து போய் இருப்பதாக கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிறது. இதனால் அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறதாம்.
இதையும் படிங்க: Gossip: கட்சி நடிகருக்கு ‘நோ’ சொல்லிட்டு… கடைசில இப்படி பண்ணிட்டாரே!
கோரிக்கை என்பதைவிட நெருக்கடி என்றே சொல்லலாம். கங்குவா திரைப்படம் வெளியானாலும் அமரன் திரைப்படத்திற்கு கூட்டம் வரும் பட்சத்தில் அந்தப் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கக்கூடாது என்ற ஒரு நிபந்தனையை நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்த கங்குவா திரைப்படம் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்தப் படத்திற்கு கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் எப்படி அமரன் திரைப்படத்தை போட முடியும் என தியேட்டர் உரிமையாளர்களும் யோசித்து கொண்டிருக்கிறார்களாம் .ஆனால் அமரன் திரைப்படத்திற்கு மக்கள் வந்தார்கள் எனில் அந்த படத்தை தூக்கவே கூடாது என ரெஜெண்ட் நிறுவனம் நிபந்தனையுடன் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.