அஜித்தின் அந்த படத்துல ஆடுனது ரெடின் கிங்ஸ்லியா? 28 வருஷத்துக்கு முன்பே நடந்த மேஜிக்

redin
Ajith: இன்று குட் பேட் அக்லி பட குழு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் ஒரு விழாவை நடத்தினார்கள். அதில் படக்குழுவில் இருந்த அத்தனை பேரும் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குனரில் இருந்து தயாரிப்பாளர் வரை டெக்னீசியன்கள் நடிகர்கள் நடிகைகள் என அனைவருமே கலந்து கொண்டு அவரவர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதில் படத்தின் இயக்குனர் ஆதிக் பேசும் பொழுது என் மனைவி ஐஸ்வர்யாவிடம் சொன்னதை விட அஜித் சாருக்கு தான் அதிக முறை லவ் யூ சொல்லி இருக்கிறேன். என்னுடைய குடும்பம் அம்மா அப்பா இவர்களுக்கு பிறகு நான் முதல் ஆளாக பார்ப்பது அஜித் சாரை மட்டும்தான் என்று கூறினார் .அதேபோல பிரசன்னா பேசும் பொழுது ஒரு படத்தில் கடைசி வரைக்கும் புரியாமல் நடித்தேன் என்றால் அது இந்தப் படம் தான் என்று சொல்லி ஆதிக் ரவிச்சந்திரனை திகழடைய வைத்தார்.
ஆனால் அவருடைய மேக்கிங் எல்லாமே பிரமிப்பாக இருந்தது என்றும் எந்தெந்த டயலாக் எந்தெந்த இடங்களில் வருகிறது ஏன் வருகிறது என எதுவுமே எனக்கு தெரியவில்லை. ஆனால் படத்தில் பார்க்கும் பொழுது பிரம்மாண்டமாக இருந்தது என்றும் பிரசன்னா கூறினார். படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த கேரக்டர் என்றால் அது ரெடின் கிங்ஸ்லி கதாபாத்திரம்தான்.
அவர் ஒரு படத்தில் வந்து நின்றாலே அனைவரும் சிரித்து விடுவோம். அப்படித்தான் இந்த படத்திலும் இருந்தது. அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலில் அவர் ஆடிய அந்த காட்சியும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்த நிலையில் ரெடின் பேசும்பொழுது கூட 28 வருஷத்திற்கு முன்பே நான் அஜித் சார் படத்தில் குரூப் டான்ஸராக நடித்திருக்கிறேன் எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

அது வேற எந்த படமும் இல்லை. அவள் வருவாளா படத்தில் ஒரு பாடலில் அஜித்துக்கு பின்னாடி ஒரு குரூப் டான்ஸராக ஆடியிருந்தாராம் ரெடின். அதன் பிறகு இப்போது தான் அஜித் சாருடன் அவருடைய காம்போவில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு ஆதிக்கு மிக்க நன்றி. அதுவும் இரண்டு காட்சிகளில் வந்தாலும் அதை பார்த்து ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவும் எனக்கு சந்தோஷத்தை தந்தது என்று கூறியிருந்தார்.