46 வயசுல ரகசிய திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி!.. மைசூரில் கல்யாணம் நடக்க என்ன காரணம் தெரியுமா?..

Published on: December 10, 2023
---Advertisement---

நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த படம் 10 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடக்காமல் நின்று போனது. அதன் பின்னர் நயன்தாராவை வைத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்து காமெடியில் கலக்கினார்.

தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த ரெடின் கிங்ஸ்லி சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், நயன்தாராவின் நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: எஸ்கேவுக்கு செம டஃப் கொடுப்பார் போல தெரியுதே!.. செல்லம்மாவுடன் சுத்துனதே ஹீரோயினாக்கத்தானா கவின்?

இந்நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திரை பிரபலங்களுக்கு பத்திரிகை எல்லாம் வைக்காமல் திடீரென தனது திருமணத்தை மைசூரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகசியமாக செய்து கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லிக்கு இது முதல் திருமணமா? அல்லது எத்தனையாவது திருமணம் என தெரியாது என்றும் சீரியல் நடிகை சங்கீதா சில படங்களிலும் நடித்துள்ளார். அவருடன் சுமார் ஒரு வருடம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த ரெடின் கிங்ஸ்லியை சமீப காலமாக சங்கீதா திருமணம் செய்துக் கொள்ள டார்ச்சர் செய்த நிலையில், கவின் நடித்து வரும் படம் மைசூரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கேயே தனது திருமணத்தை ரெடின் கிங்ஸ்லி செய்து கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் திருமண ரகசியத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கமல் ஒரே நேரத்தில் இவ்ளோ படங்களை அறிவிச்சதன் பின்னணி இதுதானாம்… இப்படி கூட யோசிப்பாங்களா…?

க்ரூப் டான்ஸராகவும், பொருட்காட்சியில் புதிய புதிய விஷயங்களை செய்து அசத்துபவராகவும் ரெடின் கிங்ஸ்லி நடிகராக ஆவதற்கு முன்பாகவே இருந்தார் என்றும் பயில்வான் ரங்கநாதன் அவர் நல்ல வசதியான ஆள் தான் என்றும் கூறியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.