Connect with us

Cinema History

என் சம்பளத்தை குறைச்சிக்கோங்க.. நாகேஷுக்கு வாய்ப்பு கொடுங்க… தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நடிகரா?

Nagesh: தற்போதைய கோலிவுட் நடிகர்களில் ஒருவரை காலி செய்து மேலே வரும் நடிகர்கள் தான் அதிகம். ஆனால் 60களில் எல்லா நடிகர்களுமே ஒருவரை வளர்த்து விட்டு அவர் கை பிடித்தே மேலே செல்லும் பழக்கத்தினை கொண்டு இருந்தனர். அப்படி ஒரு நடிகரை தன் நண்பராக கொண்டு இருந்தார் நாகேஷ்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் ஒருநாள் தனது சக ஊழியர்களால் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம் என்னும் தமிழ் நாடகத்தைப் பார்த்தார். இது நல்லா இருக்கே என அவருக்கும் ஆசை வந்தது. அதை தொடர்ந்து ரயில்வே சங்கத்தினரால் போடப்பட்ட ஒரு நாடகத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் மனிதராக நடித்தார்.

இதையும் படிங்க: பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!..

அதை பார்த்த நடிகர் எம்.ஜி.ஆர் ​​நாகேஷின் நடிப்பைப் பாராட்டினார். தனக்கு நடிப்பு வருவது போல என நம்பிக்கை கொண்டவர். தொடர்ச்சியாக பல்வேறு நாடகக் குழுக்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 1958ல், தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜி நாகேஷைக் கண்டுபிடித்தார்.

மணமுள்ள மருதராம் என்ற படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த படத்தில் நாகேஷும் சின்ன வேடத்தில் தான் நடித்தார். அடுத்து, நாகேஷ் நடித்த தாயில்லா பிள்ளை திரைப்படத்தில் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றார்.

இருந்தும், நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தான் கோலிவுட்டில் அவரது வாழ்க்கையைத் துவக்கியது. அடுத்து நாகேஷில் நடிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. ஆனால் நாகேஷ் வெற்றி நடிகராக ஆகுவதற்கு முன்னரே அவரை அறிமுகப்படுத்திய பாலாஜி செய்த காரியம் தான் ஆச்சரியமே.

இதையும் படிங்க: லியோ ப்ளாப் ஆகிடுமா?.. அடேய் உங்க லாஜிக்குல தீய வைக்க… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

தன் படத்தில் சரியாக அவருக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் தன்னை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் என் சம்பளத்தினை குறைத்து நாகேஷை புக் செய்து கொள்ளுங்கள் என்பாராம். ஆனால் அவர்களோ உங்களுக்கு இன்னும் சம்பளம் தரோம். ஆனால் நாகேஷுக்கு வாய்ப்பு தரமுடியாது என மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top