மீண்டும் தமிழ் படவாய்ப்பை கைப்பற்றிய ரித்து வர்மா.. அதுவும் மாஸ் ஹீரோவுடன்

by ராம் சுதன் |
ritu varma
X

தெலுங்குப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரீத்து வர்மா. ஐராபாத் பொண்ணான இவர் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ், அமலாபால், கஜோல் நடித்து வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பின் துல்கர் சல்மானுடன் இணைந்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தின்மூலம் தமிழில் நாயகியான அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனாலும், இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

sivakarthikeyan

sivakarthikeyan

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கில் கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஜதீரத்தினாலு'. இப்படத்தின் மூலம் அங்கு இயக்குனராக அறிமுகமானவர் அனுதீப்.

இவர் தற்போது இயக்க உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறாராம்.இந்தப்படத்தில் தான் நாயகியாக நடிக்க ரித்து வர்மா ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன்மூலம் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார் அவர். இதுவும் அனுதீப்பின் முதல் படத்தை போகவே வித்யாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

Next Story