Connect with us

முன்கோபம் வந்து பலரை அடிச்சிருக்கேன்.. பல உண்மைகளை உளறிய சிவகார்த்திகேயன் பட கவர்ச்சி கன்னி.!

Cinema News

முன்கோபம் வந்து பலரை அடிச்சிருக்கேன்.. பல உண்மைகளை உளறிய சிவகார்த்திகேயன் பட கவர்ச்சி கன்னி.!

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா எனும் படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சக்கரா, நெஞ்சம் மறப்பதில்லை, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்த ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இப்படங்களை தொடர்ந்து தற்போது சவால்கள் நிறைந்த வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கருங்காப்பியம், சூர்ப்பனகை, பார்டர் உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனையடுத்து, அடிக்கடி நடிகை ரெஜினாவுக்கு முன்கோபம் வருவதாகவும், அப்போது அவர் சிலரை கைநீட்டி அடிக்கப் பாய்ந்துள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலானது. இதற்கு ரெஜினினாவே சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- 12 அழகிகளுக்கு சுயம்வரம் நடத்தி மனைவியை செலக்ட் செய்த பாடகர்.! விஷால் பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

regina

இது தொடர்பாக பேசிய ரெஜினா “தைரியம் என்பது வெளியில் எங்கையாவது இருந்து எடுத்துக்கொண்டு வருவது இல்லை. அது நமக்குள்ளேயே இருக்க கூடிய ஒன்று. எனக்கு இது என்னுடைய பள்ளி பருவ நாட்களில் தான் எனக்கு புரிந்தது.

எனக்கு முன் கோபம் வந்தால் என்னை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலும், இப்போது சினிமா துறையில் இருக்கும்போதும் என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபத்தில் கண்டபடி அடித்திருக்கிறேன் ஆனால், சரியான காரணம் இல்லாமல் கோபம் வராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என பேசியுள்ளார் ரெஜினா.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top