Categories: latest news

சாராயத்தை ஊத்து… மதுபான பாட்டலுக்கு விளம்பரம் செய்த பிரபல நடிகை!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

regina cassandra

இந்நிலையில் தற்போது signature என்ற whisky பாடலுக்கு விளம்பரம் செய்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். நடிகைகளே இப்படி ஆல்கஹாலுக்கு விளம்பரம் செய்தால் அதை பார்த்து எத்தனை பேர் குடிக்கு அடிமையாவார்கள்? என நெட்சன்ஸ் விமர்சித்துள்ளனர்.

Published by
பிரஜன்