
Cinema News
உதட்டை பிடித்து இழுத்தார்…அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொன்னார்…மீடு புகார் கூறிய ரெஜினா…
மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினி கஸந்திரா. விஷால் நடித்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தான் சந்தித்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசியுள்ளார். எனக்கு அப்போது 20 வயது இருக்கும். நடிக்க துவங்கிய நேரம். ஒருவர் போனில் அழைத்து ‘அட்ஜெஸ்மெண்ட் செய்வீர்களா?’ என கேட்டார். நான் மேனேஜர் பேசுவார் எனக் கூறினேன்.
அவர் மீண்டும் மீண்டும் அதை கேட்டபோதுதான் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரிந்தது. போனை கட் செய்து விட்டேன். திரைத்துறையில் மட்டுமல்ல, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண்களிடம் கேட்டாலும் இது போன்ற கதைகளை சொல்வார்கள்.
நான் சென்னையில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஈகா தியேட்டர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒருவர் என் உதட்டை பிடித்து இழுத்துவிட்டு சாதாரணமாக கடந்து சென்றார். இப்படிப்பட்ட உலகத்தில்தான் வாழ்கிறோம். இப்போது வாய்ப்பு வாங்கி தர ஏஜென்சிகள் வந்துவிட்டன. அதன் மூலம் நடிக்க வரலாம். எனக்கு மோசமான அனுபவம் நடந்தது கிடையாது என அவர் கூறினார்.