நீ ஏன்டி என் காலத்துல இல்லாம போன...! டிரென்டிங்கான நடிகையை பற்றி வருத்தப்பட்டாராம் பாரதிராஜா...
70,80 களில் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் மூலம் அறிமுகமான பல நடிகைகள் முன்னனி நடிகைகளாகவே வலம் வந்தனர். எதார்த்த நடிப்பை எதிர்பார்க்கும் இவர் நடித்தே காட்டி தனக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கி விடுவார்.
ராதா, ராதிகா உட்பட பல முன்னனி நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவையே சேரும். இயக்குனராக மட்டுமில்லாமல் சமீப கால படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கூட தாத்தாவாக நடித்திருப்பார்.
இதையும் படிங்கள் : நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?
இப்பொழுது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பாரதிராஜாவை பற்றி சில தகவல்களை கூறியிருந்தார். அதாவது பாரதிராஜா சார் என்கிட்ட இப்ப வரைக்கும் நன்றாக பேசக்கூடியவர். நன் முறையில் பழகக்கூடியவர் என்று கூறிய ரேகா நாயர்
இதையும் படிங்கள் : நீங்க நினைச்சது தப்பு…அந்த 2 ரஜினி படமும் பிளாப்தான்!…முக்கிய சினிமா பிரபலம் பகீர்…
அவர் என்னிடம் நீ ஏன்டி நான் இருக்கும் போது நடிக்க வரவில்லை. நீ அப்பொழுது இருந்திருந்தால் நீ தான் முன்னனி நடிகையாக இருந்திருப்பாய் என கூறுவார் என ரேகா நாயர் தெரிவித்தார். மேலும் ரேகா நாயரே பாரதிராஜா, பாக்யராஜ், பாலசந்தர் போன்றோர் இப்பொழுதி இருந்திருந்து எனக்கு ஒரு 25 வயது இருந்திருந்தால் நான் தான் முழு நடிகையாக இருந்திருப்பேன் எனவும் கூறினார்.