இந்தி நடிகை ரேகாவின் தந்தை யார் தெரியுமா? காதல் மன்னன் சார் லிஸ்ட் பெருசா போகுதே!
இந்தியில் டாப் நாயகியாக இருந்த ரேகாவின் தந்தை குறித்த தகவல்கள் சிலருக்கு தெரிந்தாலும், பலருக்கு தெரியாமல் தான் இருக்கிறது. அவரின் தந்தை மிகப்பெரிய கோலிவுட் ஸ்டார். காதல் மன்னன் என அனைவராலும் புகழப்பட்டவர். இப்போதே பலரிடம் யார் என்ற யூகம் இருக்கும். என்ன நடந்தது என்ற சுவாரஸ்ய தகவல்கள்.
தமிழ் சினிமாவின் காதல் மன்னன் ஜெமினி கணேசன். இவர் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் காதல் மன்னனாகவே வலம் வந்தார். முதல் மனைவி பாபுஜி அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தது. அப்போது தன்னுடன் நடித்த நடிகை சாவித்ரியை மணந்து கொண்டார். சொந்த வீட்டிற்கு கூட வராமல் 15 வருடம் சாவித்ரியுடனே இருந்தார். நன்றாக இருந்த குடும்பத்தை சாவித்ரி தான் கெடுத்தார் என பேட்டியில் கூட ஜெமினியின் மகளான கமலா செல்வராஜ் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு சாவித்ரி காதலுக்கு முன்னவே திருமணத்துக்கு மீறிய பந்தம் ஒன்று இருந்ததாம். ஜெமினி நிறுவனத்தில் அவர் கேஸ்டிங் மேனஜராக இருந்த போது, அவர் தேர்ந்தெடுத்த நடிகை தான் புஷ்பவள்ளி. அவருடன் காதலில் இருந்தாராம். அப்போது அவருக்கு பிறந்த குழந்தை தான் இந்தி நடிகை ரேகா. ஆனால், புஷ்பவள்ளியை ஜெமினி கணேசன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ஜெமினியை பிரிந்து சென்றார் புஷ்பவள்ளி. மகள் ரேகா தனது தந்தையை பல வருடம் நேரில் கூட பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.