GOAT Movie: விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டு வருகிறது விஜயின் கோட் திரைப்படம். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா மற்றும் லைலா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. சென்னையில் பெரும்பாலான இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அவ்வப்போது விஜய் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். இவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் த்ரிஷா விவகாரம்! எல்லாத்துக்கும் மணிரத்தினம்தான் காரணம்.. என்னய்யா சொல்றீங்க?
தனது அரசியல் வருகையை உறுதி செய்த பிறகு வெளியாகும் படம் கோட் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையில் விஜய் தனது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கோட் படம் ஜூன் 22 விஜயின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று ஒரு சில செய்திகள் வெளிவந்த நிலையில்,
ரிலீஸ் தேதியில் படக்குழு மாற்றம் செய்திருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோட் படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக கூறியிருக்கிறார்களாம். ஏனெனில் வசூலில் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்குவதே விஜயின் படங்கள்தான். அதனால் அரசு விடுமுறை நாள்களில் ரிலீஸானால்தான் வசூலை அள்ள முடியும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!
ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான புஷ்பா 2 படமும் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் புஷ்பா 2 தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கியிருக்கிறதாம். அதோடு ஹிந்தியில் சிங்கம் என்ற படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.
அதனால் கோட் படம் பேன் இந்தியா படம் என்பதால் ஆந்திரா மற்றும் ஹிந்தியில் தியேட்டர்கள் கிடைக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் ரிலீஸ் தேதியில் இன்னும் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்னு
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…