Categories: latest news

AK64: புரட்யூசர் கிடைக்காமல் லோல் படும் ஆதிக் ரவிச்சந்திரன்!.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா!…

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தில் நடிக்க அஜித் கேட்ட 185 கோடி சம்பளம். மொத்த செலவையும் சேர்த்தால் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி வருகிறது.

அஜித்தை வைத்து அவ்வளவு பட்ஜெட் போட முடியாது என தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெரிய தயாரிப்பாளர்களும் பின்வாங்கி விட மும்பையில் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார்கள்.
ஒரு பக்கம் அஜித் கார் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் கார் ரேஸ் கம்பெனி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

அஜித்தின் கார் ரேஸுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் எனவும் அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் அஜித் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். கார் ரேஸுக்கு இடையில் மலேசியாவில் Campa Engery என்கிற குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இதை இயக்கி வருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் அஜித்தின் புதிய படத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தையே தயாரிப்பாளராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். ஒருபக்கம் கோகுலம் சினிமாஸ் நிறுவனத்திடமும் பேசி வருகிறார்களாம். அநேகமாக கோகுலம் சினிமாஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து AK 64 படத்தை தயாரிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Published by
சிவா