சிம்புவுக்கு கார்?...வெங்கட் பிரபுவுக்குத்தான் கொடுத்துருக்கனும்… உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..

by Arun Prasad |
சிம்புவுக்கு கார்?...வெங்கட் பிரபுவுக்குத்தான் கொடுத்துருக்கனும்… உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..
X

சிலம்பரசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆனால் சிம்பு இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்தன. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், பவா செல்லதுரை, சித்திக் என பலரும் நடித்திருக்கின்றனர்.

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக “மல்லிப்பூ” பாடல் உலகம் முழுவதும் வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இத்திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சிம்புவுக்கு ஒரு விலை உயர்ந்த காரையும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு விலை உயர்ந்த பைக்கையும் பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

அதே போல் இத்திரைப்படத்திற்கு மறைமுகமாக ஒவ்வொரு நாளும் புரோமோட் செய்த? கூல் சுரேஷுக்கு ஒரு ஐ ஃபோனையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “நியாயமாக ஐசரி கணேஷ் கார் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றால் வெங்கட் பிரபுவுக்குத்தான் வாங்கிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் மாநாடு தான் மெகா ஹிட். அந்த ஹிட்டை வைத்து தான் இந்த சிம்பு படத்தை நன்றாக பிசினஸ் செய்துவிட்டார் ஐசரி கணேஷ்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ஓடிடி, சேட்டலைட் உரிமத்தில் மிகப்பெரிய லாபத்தை பார்த்துவிட்டார். ஆனால் திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு லாபத்தை கொடுக்கவில்லை. வெளியீட்டிற்கு முன்பான ஓடிடி, சேட்டலை உரிமத்தில் அவர் 20 கோடி ரூபாய் லாபம் பார்த்துவிட்டார்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படம் சிம்புவின் மார்க்கெட்டை ஏற்றிய திரைப்படம். இத்திரைப்படத்தை வைத்து தான் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை நல்லபடியாக பிசினஸ் செய்துவிட்டார் என அந்தணன் கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story