இளையராஜா - வைரமுத்து பிரிஞ்சதுக்கு உண்மையான காரணமே அதுதான்!.. போட்டு உடைத்த பத்திரிக்கையாளர்!...

by சிவா |
raja
X

raja

தமிழ் சினிமாவில் இசையில் உச்சம் தொட்டவர் இளையராஜா. மதுரை பண்ணைபுரத்திலிருந்து கோடம்பாக்கம் வந்து வாய்ப்புக்காக தேடி அலைந்து, அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறி பட்டி தொட்டியெங்கும் தனது பாடலை ஒலிக்க வைத்தவர்.

எம்.எஸ்.வி மெல்லிசை என்றால் இளையராஜா கிராமத்து ரம்மியமான இசையை கொடுத்து பாமரர்களையும் தன்பக்கம் வளைத்தவர். இவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் ஓடியதுண்டு. முதலில் இளையராஜா இசையை உறுதி செய்த பின்னரே தயாரிப்பாளர்கள் ஹீரோ யார் எனவே யோசிப்பார்கள். அந்த அளவுக்கு ராஜாவின் இசை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ilayaraja

ilayaraja

அதேபோல், தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதியவர். ராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாழை பொழுது’ பாடல் ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பை பெற்றது. அதன்பின் ராஜாவின் இசையில் நூற்றுக்கணக்கான பாடலை வைரமுத்து எழுதினார். பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் மண் வாசனை மாறாத பல காலத்திற்கும் தாண்டிய பாடல்கள் வெளிவந்தது.

raja

raja

ஆனால், ஒருகட்டத்தில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே சில மனக்கசப்புகள் வந்தது. அதன்பின் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. இப்போதுவரை அது தொடர்கிறது. பல மேடைகளில் கூட மறைமுகமாக இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்த காட்சிகளும் நடந்தது. இருவரும் பிரிந்தததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை மற்றும் நாடோடி தென்றல் ஆகிய படங்களில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் ராஜாவுக்கு பிடிக்கமால் மாற்ற சொன்னதால்தான் பிரச்சனை வந்ததாக பொதுவாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு புதிய தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இளையராஜாவை ஒரு தொடர் எழுதும் படி ஒரு வார பத்திரிக்கை கேட்டது. அப்போது ராஜா பீக்கில் இருந்தார். அவர் நன்றாக எழுதுவார் என்றாலும் தொடர் எழுதுவதற்கு அவருக்கு நேரம் இல்லை. எனவே, அவரின் நண்பர் வைரமுத்துவை எழுத சொன்னார்.

raja

raja

வைரமுத்துவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், ‘நான் உங்களை எழுத சொன்ன தகவலை யாரிடம் சொல்ல வேண்டாம்’ என வைரமுத்துவிடம் ராஜா சொல்லிவிட்டார். அந்த தொடரும் வெளிவந்தது. ஆனால், ஒரு ஊடகத்தில் பேட்டி கொடுத்த வைரமுத்து அதை எழுதியது நான்தான் என சொல்லிவிட்டார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அவர் வைரமுத்துவிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ட்யூன் கேட்டு வந்த இயக்குனரை அவமானப்படுத்திய இளையராஜா!.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்..

Next Story