திருமணமே ஆகாமல் பொய் சொன்னாரா கனகா?!.. அதிர்ச்சி தகவலை சொன்ன பத்திரிக்கையாளர்…

தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தேவிகா. அழகான கண்களால் ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் மகள்தான் நடிகை கனகா. அம்மாவை போலவே பெரிய, அழகான கண்களை கொண்டவர். எனவே, இவரை கங்கை அமரன் தான் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகம் செய்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

எனவே, கனகாவை தேடி பல வாய்ப்புகள் வந்தது. ராமராஜன், ரஜினி, கார்த்திக், பிரபு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். கமலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. சிறப்பாக துவங்கிய கனகாவின் கேரியர் அவரின் அம்மாவின் மறைவுக்கு பின் சரிந்து போனது. அம்மாவின் இழப்பு, சொத்தை அபகரிக்க அப்பாவும், உறவினர்களும் முயற்சி செய்தது என பல விஷயங்கள் கனகாவை நோகடிக்க அவர் தனிமை விரும்பியாக மாறி அவர் வசிக்கும் வீட்டை விட்டுக்கூட அவர் வெளியேவரவில்லை. இப்போதும் அது நீடிக்கிறது.

சில வருடங்களுக்கு செய்தியாளர்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் கணவரின் பெயர் புருஷோத்தமன். அவர் வெளிநாட்டில் இருக்கிறார்’ என கனகா சொன்னார். ஆனால், அது பொய் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மறுத்துள்ளார். சொத்தை அபகரிக்க பலரும் முயன்றதால் தனக்கு திருமணமாகி விட்டது என சொன்னால் ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்துதான் கனகா அப்படி பொய் சொல்லியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.