Connect with us
saravana store

மாஸ்டருக்கு வந்த அதே பிரச்சனை வலிமைக்கும்.. இது என்னடா சோதனை!…..

Cinema News

மாஸ்டருக்கு வந்த அதே பிரச்சனை வலிமைக்கும்.. இது என்னடா சோதனை!…..

தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரமான அஜித்தின் வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படத்துடன் வலிமை திரைப்படத்திற்கு சில ஒற்றுமைகள் உள்ளது என ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி 15 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது, தற்போது படம் ரிலீஸ் தேதிக்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணி கொண்டாட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் மாஸ்டர் திரைப்படத்திற்கும், வலிமை திரைப்படத்திற்கும் இப்டி ஒரு ஒற்றுமை இருக்கு, மாஸ்டருக்கு வந்த அதே பிரச்சனை வலிமைக்கும் வந்திருக்கு என ரசிகர்கள் போஸ்ட் செய்து வருகின்றனர்.

அது என்ன ரெண்டு படத்துக்கும் ஒரே பிரச்சனை என்றால், மாஸ்டர் திரைப்படம் வெளியான போது கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வந்ததால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க பட்டது. அதைப்போல், தற்போது வலிமை திரைப்படத்திற்கும் ஓமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கபட்டுள்ளது. அஜித், விஜய் படம் ரிலீசான தியேட்டரில் கால் வைக்க கூட இடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதாவது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தான் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டது. அதைபோல், இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி தான் வலிமை வெளியிடப்படவுள்ளது. அது மட்டும் இல்ல, இரண்டு திரைப்படங்களின் ரன்னிங் டைமும் சரியா 2 மணி நேரம் 58 நிமிஷமாம், என்ன ஒரு ஒற்றுமைல என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Continue Reading
To Top