துப்பாக்கி பிடிக்கிற கையா இது!! "புஷ்பாவிடம்" கொஞ்சும் இளசுகள்...
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி , சென்னையில் பிறந்து அமெரிக்காவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகிற்கு அறிமுகமானார்.
தொலைகாட்சி சீரியல் மூலம் தமிழ் மீடியா உலகிற்கு வந்த இவர், 2015 ஆம் ஆண்டில் "மசாலா படம்" என்ற படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தார். "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபதி பசுபுலேட்டி.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பின் கோ-2, மணல் கயிறு 2 ஆகிய படங்களில் நடித்த ரேஷ்மாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதன்பின் பிக்பாஸ் 3சீசன் ல் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு தமிழில் "வணக்கம் டா மாப்ள, பேய் மாமா" உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "விலங்கு" என்ற வெப் தொடர் ரேஷ்மாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது "தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, புடவை அணிந்து துப்பாக்கி பிடித்தவாறு" எடுத்த போட்டோ ஷூட் லைக்ஸ் அள்ளி வருகிறது.