Connect with us
reshma

Entertainment News

இழுத்து மூடினாலும் எடுப்பா தெரியுது அழகு!.. ரேஷ்மாவை நாட்டுக்கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்!..

பெரும்பாலும் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அல்லது கேரளாவிலிருந்து வருவார்கள். தமிழ் சீரியல்களில் நடிக்கும் 90 சதவீத நடிகைகள் அப்படித்தான். அந்த வரிசையில், ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சீரியல்களில் கலக்கி வருபவர் ரேஷ்மா.

reshma

ஆந்திராவில் சின்னத்திரையில் தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், சீரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, அதன்பின் விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலான ரேஷ்மா கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தவர்.

reshma

அதன்பின் மகனுடன் சென்னை வந்து செட்டில் ஆனார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டுவார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூரியின் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மாதான்.

reshma

அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். விலங்கு வெப்சீரியஸிலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். இப்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். ஜிகர்தண்டா புகழ் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர்.

reshma

ஒருபக்கம், வில்லியாகவும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் சிறந்த வில்லிக்கான விருதையும் பெற்றிருக்கிறார். அதோடு, புடவை மற்றும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top