இது என்ன கண்ட்றாவி டிரெஸ்!...ரேஷ்மாவை வச்சி செய்யும் ரசிகர்கள்.....
நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் ரேஷ்மா. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தவர் ரேஷ்மா. அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவாடை ஜாக்கெட் அணிந்து சுடிதாருக்கு போடும் ஷாலை போட்டு மூடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இது என்ன கண்ட்ராவி டிரெஸ்’ என கிண்டலடித்து வருகின்றனர்.