நீங்க மூடு ஏத்துறீங்க.! நான் அப்டி செஞ்சா சந்தோசம் தான்.! அசராமல் பதிலளித்த 'புஷ்பா' ரேஷ்மா.!
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரியை, புஷ்பா புருஷன் சூரியாக மாற்றிய திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷனாக சூரி அதகளம் செய்திருப்பார். அதில் புஷ்பாவாக நடிகை ரேஷ்மா நடித்திருப்பார். அப்போதிலிருந்து பலதரப்பட்ட ரசிகர்களை அவர் பெற்றுவிட்டார்.
அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார். அதற்கு பலரும் கமெண்ட் செய்துவிடுவர். அண்மையில் ஒரு வீடியோவில் அந்த கமெண்டுகளை படித்து ஒருவர் ரேஷ்மாவிடம் கேள்வி கேட்டறிந்தார்.
அதில் ஒரு நபர், ' நீங்க ரொம்ப மூடு ஏத்துறீங்க.' என்பது போல கமெண்ட் செய்து இருந்தார். அதற்கும் சலைக்காமல் ரேஷ்மா பதிலளித்தார். அவர் எவ்வளவு சோகமாக இருந்திருப்பார், எனது போஸ்ட்டை பார்த்த பிறகு அவர் மூட் ஆகி உள்ளார் என பாசிட்டிவாக அதனை எதிர் கொண்டார்.
இதையும் படியுங்களேன் - கே.ஜி.எப்-2 செம.! புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்.! பீஸ்ட் உங்க கண்ணனுக்கு தெரியலையா.?!
இன்னொரு நபர் , 'நீங்கள் புடவையை விட மாடர்ன் டிரஸ்ஸில் அழகாக இருக்கிறீர்கள்.' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கும் அவர் சலைக்காமல் ஒருவேளை அவருக்கு சேலை பிடிக்காமல் இருந்திருக்கலாம். மாடர்ன் டிரஸ் அவருக்கு பிடித்திருக்கலாம் அதனால் இப்படி கமெண்ட் செய்துள்ளார் என்று கூலாக பதில் அளித்துள்ளார்ரேஷ்மா.
எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். அதற்கு என்ன கமெண்ட் செய்தால் என்ன? அதனை நான் கண்டுகொள்வதில்லை. என்பது போல தனது பதில்களை சலைக்காமல் 'புஷ்பா' ரேஷ்மா அந்த பேட்டியில் பதிலளித்துக் கொண்டிருந்தார்.