ரசிகர்களை "ஊ" சொல்ல அழைக்கும், "புஷ்பா" நடிகை!!
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி , சென்னையில் பிறந்து அமெரிக்காவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகிற்கு அறிமுகமானார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தயாரித்த "வம்சம்" என்ற தொலைகாட்சி சீரியல் மூலம் தமிழ் மீடியா உலகிற்கு வந்த இவர், 2015 ஆம் ஆண்டில் "மசாலா படம்" என்ற படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தார். "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபதி பசுபுலேட்டி.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பின் கோ-2, மணல் கயிறு 2 ஆகிய படங்களில் நடித்த ரேஷ்மாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதன்பின் பிக்பாஸ் 3சீசன் ல் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதுதவிர இவர் பல தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் "புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா பாடலுக்கு, உதட்டை சுழித்து " மூவ்மெண்ட் செய்யும் விடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதோ அந்த வீடியோ—->https://www.instagram.com/reel/CZlbqGis6Vd/