Connect with us
mohan

Cinema History

மோகனுக்கு மைக் பிடிக்கும் ஸ்டைல் எப்படி வந்தது தெரியுமா?…சுவாரஸ்ய பிளாஷ்பேக் இதோ….

தமிழ் சினிமாவின் சில்வர் ஜூப்ளி ஹீரோ என அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். பெங்களூரில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து கலக்கியவர் இவர். பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் கமல்ஹாசனும் நடித்திருப்பார்.

mohan

mohan

இப்படம் வெற்றி பெற்றதும் தமிழில் மூடுபனி படத்தில் நடித்தார் மோகன். இப்படமும் சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். 2 நாட்களில் இவரின் 3 படங்கள் வெளியாகி மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை. ஒருமுறை ஒரு வருடம் இவரின் 12 படங்கள் வெளியாகி எல்லாமே ஹிட் அடித்தது. இப்படி பல சாதனைகளை படைத்தவர்தான் மோகன். இவரின் பல திரைப்படங்கள் சில்வர் ஜூப்ளி அதாவது 125 நாட்கள் ஓடியது.

இவரின் படம் என்றால் பாடல்கள் இனிமையாக இருக்கும் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போலவே இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதை அள்ளும். இவரின் வெற்றியில் ரஜினி, கமலெல்லாம் ஆடிப்போன காலங்கள் உண்டு.

mohan

mohan

இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் மைக்கை பிடித்து பாடுவது போல ஒரு பாடல் கட்சியாவது கண்டிப்பாக இருக்கும். எனவே, இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என அழைப்பதுண்டு. இப்போது வரை இந்த பெயர் அவருக்கு நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பிரியாணி என் வாழ்க்கைல சாப்டதே கிடையாது… சூர்யா புகழ்ந்த அந்த பிரபலம்…

90க்கு பின் இவரின் மார்க்கெட் சறுக்கியது. அதிக படங்களில் நடிக்கவில்லை. இடையில் பல திரைப்படங்களில் அண்ணன், அப்பா வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், பிடிவாதமாக அவற்றை மோகன் மறுத்துவிட்டார். கடைசியாக இவரின் நடிப்பில் 2008ம் ஆண்டு சுட்ட பழம் என்கிற படம் வெளியானது. தற்போது 13 வருடங்கள் கழித்து ஹரா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

mohan

mohan

இந்நிலையில், படத்தில் மைக் பிடித்து பாடுவதால் இவருக்கு மைக் மோகன் என பெயர் வந்தாலும், மைக்கை மோகன் லாவகமாகவும், ஸ்டைலாகவும் பிடித்து தலையை ஆட்டி ஆட்டி வாயசைத்து பாடும் ஸ்டைலிதான் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். இவருக்கு பெண் ரசிகைகளும் உருவனார்கள்.

உண்மையில் இதற்கு பின்னணியில் இரு கதை இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பெங்களூரில் பல மேடை கச்சேரிகளில் நடிகர் மோகன் பாடியிருக்கிறாராம். அந்த அனுபவம்தான் மைக்கை ஸ்டைலாக பிடித்து போல நடிப்பதற்கு அவருக்கு கை கொடுத்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top