சிறுத்தை சிவா, மகிழ் திருமேனி நிலைமை தான் கார்த்திக் சுப்புராஜுக்குமா?.. மனுஷன் கடுப்பாகிட்டாரே!..

by Saranya M |   ( Updated:2025-05-05 00:33:50  )
Karthik Subbaraj
X

#image_title

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெகெடே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஸ்வாசிகா மற்றும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் நல்ல ஓபனிங்கை பெற்றது. ஆனால், கலவையான விமர்சனங்கள் அந்த படத்துக்கு கிடைத்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது.

முதல் 2 நாட்களிலேயே உலகளவில் 46 கோடி வசூல் செய்ததாக 2டி நிறுவனம் போஸ்டர் அடித்தது. ஆனால், இதுவரை இந்தியளவில் முதல் 4 நாட்களில் மட்டும் 43 கோடி ரூபாய் தான் வசூல் வந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், சூர்யாவின் படங்களை பார்க்க பொதுமக்கள் அதிக ஆர்வத்தை செலுத்துவதில்லை என்கின்றனர்.

ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் 19.25 கோடி ரூபாயும், 2வது நாளில் 7.75 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 8 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் வசூல் அதிகரிக்காமல் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் செய்தது. திங்கட்கிழமையான இன்று அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் டிக்கெட் புக்கிங் ஒரளவுக்கு உள்ளது.

#ரெட்ரோ

இந்நிலையில், படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என தெரிந்துக் கொண்டேன் என பேசியுள்ளார். மேலும், சிலர் வேண்டுமென்றே வன்மத்தை கொட்டுகின்றனர் என்கிறார்.

வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் விமர்சனங்களால் தான் மக்களுக்குத் தெரிய வந்து வெற்றியடைந்தன. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வரும் போது அமைதியாக இருந்த கார்த்திக் சுப்புராஜ் இப்போ இப்படி பல்டி அடிக்கிறாரே என்கின்றனர். சிறுத்தை சிவா, மகிழ் திருமேனி வரிசையில் இவரையும் உட்கார வைத்துவிடுவார்கள் என்கிற பயம் தான் காரணமா என்கின்றனர்.

Next Story