Retro: விடாமுயற்சி நிலைமைய பாத்துமா இப்படி? ‘ரெட்ரோ’ என்ன பாடு படப் போகுதோ?

by Rohini |   ( Updated:2025-04-11 09:19:00  )
retro
X

retro

Retro: முதல் முறையாக கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கிறது ரெட்ரோ திரைப்படம். அது மட்டுமல்ல சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இதன் மூலம் சூர்யா மற்றும் பூஜாவும் முதன் முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். இது ஒரு அதிரடி ஆக்சன் காதல் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கொஞ்சம் சென்டிமென்ட் கலந்த படமாகவும் இது இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தில் கண்ணாடி பூவே மற்றும் கனிமா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது .இது ஒரு கோடைகால பிளாக்பெஸ்டர் திரைப்படமாகவும் சூர்யாவின் திரைப்பட வரிசையில் இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு பெரிய கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 18ஆம் தேதி நடத்த முடிவெடுத்திருக்கின்றனர் .இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சூர்யா நடிப்பில் பெரிய தோல்வியை தழுவிய படம் கங்குவா. அந்தப் படத்தின் தோல்வியை ரெட்ரோ திரைப்படம் சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் ரெட்ரோ திரைப்படத்தைப் பற்றி ஆனந்த விகடன் பேட்டியில் கார்த்திக் சுப்பராஜ் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது படத்தின் டீசரிலேயே சில விஷயங்களை சொல்லியிருப்பேன்.

சூர்யா சார் ஏன் கோபக்காரராக இருக்கார். பூஜாகிட்ட கொடுத்த உறுதிமொழிகளை அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை. சூர்யா சார் தூத்துக்குடி தமிழை ரொம்ப அழகாக பேசியிருக்கிறார். கதை பல இடங்கள்ல பயணிப்பதால் தேவைக்கேற்ற பல தோற்றங்களில் வர்றார். ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்க விரும்புகிறேன். இது கேங்க்ஸ்டர் படம் கிடையாது என கார்த்திக் சுப்பராஜ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விடாமுயற்சி படம் நீங்க எதிர்பார்க்கிற படம் கிடையாது என சொல்லி சொல்லியே கடைசியில் அந்தப் படத்தின் ரிசல்ட் என்னாச்சு என தெரியும். இப்போது கார்த்திக் சுப்பராஜும் அதே மாதிரிதான் பேசி வருகிறார். இது எங்க கொண்டு போய் முடிய போகிறதோ?

Next Story