Retro: ரெட்ரோ சூர்யாவுக்காக எழுதியது இல்ல… கார்த்திக் சுப்புராஜே இப்படி சொல்லிட்டாரே!

Karthick Subburaj: தற்போது இருக்கும் இயக்குனர்களில் ஒரு படத்திற்காக பெரிய உழைப்பை போட்டு அதில் சூப்பர் ஹிட் அடைவது ஒரு சிலர்தான். அப்படி ஒரு இயக்குனராக தான் இன்று வரை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ படம் குறித்து சில ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். கோலிவுட்டில் பீட்சா படம் மூலம் அறிமுகமாக அவர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதைத்தொடர்ந்து பாபி சிம்ஹாவை வைத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான எல்லா திரைப்படங்களும் புதுவித கதையுடன் வித்தியாசமான திரைக்கதையின் ரசிகர்களை கவர்ந்து வந்தது.
தனுஷின் ஜெகமே தந்திரம், ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படங்கள் சுமார் வெற்றியை பெற்றாலும் கார்த்திக் சுப்புராஜின் கதை ரசிகர்களை எப்போதுமே கவர்ந்து வந்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் இருவரின் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் தற்போது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி திரைப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் இறங்கி இருக்கிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரெட்ரோ திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பேசும்போது, மெட்ரோ திரைப்படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தான் முதலில் எழுதப்பட்டது.
முதலில் இப்படம் ஆக்ஷன் கதையாக தான் இருந்தது. ஆனால் பின்னர் இப்படத்தின் ஜானர் காதல் கதையாக மாறியது. அதைத் தொடர்ந்து இப்படத்தை சூர்யாவிடம் கொண்டு வந்தேன். சூர்யா சாரிடம் சொன்ன போது கூட நீங்க தலைவரிடம் சொன்னீங்களா என்றார்.
நானும் சொன்னேன் என்றேன். அவர் செய்வது போலதான் கதை இருக்கு என்றார். பேட்ட படத்துக்கு பின்னர் ரஜினி சாருக்கு நிறைய கதை சொன்னேன். எதுவுமே அமையவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.