ரெட்ரோவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷன்!. முதல் நாள் செம வசூலை அள்ளிய ஹிட் 3!…

by சிவா |   ( Updated:2025-05-02 05:33:41  )
hit3
X

Hit3: மே 1ம் தேதியான நேற்று சூர்யாவின் ரெட்ரோ, சசிக்குமார் - சிம்ரன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியானது. இதில், ரெட்ரோ படத்தை கார்த்தி சுப்பராஜ் இயக்கியிருந்தார். சூர்யாவுக்கு கங்குவா படம் சரியாக போகாத நிலையில் ரெட்ரோ படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படம் இது. இந்த படத்தின் கதை 1960ல் துவங்கி 1990ல் முடிவடைவது போல எழுதியிருக்கிறார்கள்.

retro movie 1
retro movie 1

படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் 2.45 மணி நேரம் ரசிகர்களை கொஞ்சம் சோதிக்கிறது. 80களில் வந்த ரஜினி படங்களின் ரெப்ரன்ஸும் இந்த படத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆர் கால கதையை கொஞ்சம் உல்டா செய்து எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் கிரியேசன்ஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாளில் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 17.5 கோடியும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 2.5 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

hit

அதேநேரம், இந்த படத்தோடு தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படமும் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வெளியானது. இந்த படம் நேற்று ஒரே நாளில் 40 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பேன் இண்டியா படம் என்பதால் ரெட்ரோ படத்தை விட இப்படம் 2 மடங்கு வசூல் செய்திருப்பதாக கருதப்படுகிறது.

அதேபோல், சசிக்குமார் - சிம்ரன் நடித்துள்ள டூரிஸ் படம் முதல் நாள் வசூலாக 2 கோடியை வசூலித்திருக்கிறது. இன்று வெள்ளி மற்றும் தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால் இந்த எல்லா படங்களும் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

Next Story