கங்குவா வசூல் கூட வரலயே!. ரெட்ரோ முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?!…

by சிவா |   ( Updated:2025-05-01 21:45:23  )
retro
X

Retro Movie: நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் ஒரு மெகா ஹிட் சூர்யாவுக்கு அமையவில்லை. அதன்பின் அவர் நடித்து சிங்கம் 3, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா போன்ற படங்கள் தியேட்டரில் வெளியானாலும் அந்த படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. அதிலும், கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.

கங்குவா படம் வெளியான போது சூர்யாவை பிடிக்காத கும்பல் வன்மத்தோடு அவரை குறி வைத்து தாக்கியது. படத்திற்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்களை பரப்ப படம் ஓடவில்லை. இது சூர்யாவை அப்செட் ஆக்கியது. இந்த படம் வெளியாகும்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருந்தார் சூர்யா.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள படம்தான் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கங்குவா படம் தோல்வி ஆன நிலையில் ரெட்ரோ படம் என்னவாகும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

retro surya 2025
retro surya 2025

இந்நிலையில்தான் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 1960களில் துவங்கி 1990-ல் முடிவது போல படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவோடு சேர்ந்து ரவுடிசம் செய்யும் ஒரு கட்டத்தில் காதலிக்காக வன்முறையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்.

ஆனால், இது அவரின் அப்பாவுக்கு பிடிக்காமல் போக பிரச்சனை வருகிறது. காதலியும் அவரை விட்டு சென்றுவிட அவரை தேடிச்செல்கிறார் சூர்யா. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்நிலையில், இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 17.5 கோடி வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கங்குவா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்ததால் அப்படம் முதல் நாள் 22 கோடியை வசூல் செய்தது. அதை விட 2 கோடி குறைவாகவே வசூல் செய்திருக்கிறது ரெட்ரோ. அதேநேரம், படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ வருவதால் ரெட்ரோ நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story