சூர்யாவின் கனிமா பாடல் பொண்டாட்டி பாட்டில் இருந்து சுட்டதுதானாம்! அவரே சொல்லிட்டாரே!

by Akhilan |
சூர்யாவின் கனிமா பாடல் பொண்டாட்டி பாட்டில் இருந்து சுட்டதுதானாம்! அவரே சொல்லிட்டாரே!
X

Surya: சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கனிமா பாடல் உருவான விதம் குறித்து அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நேரம் திடீரென குடும்பத்துடன் மும்பை நோக்கி செட்டில் ஆனார். முதலில் அது ஜோதிகாவின் விருப்பம் எனக் கூறப்பட்டது. ஆனால் சூர்யாவின் திடீர் பாலிவுட் ஆசை காரணம் தான் என பின்னால் தகவல் வெளியானது.

இடைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தொடர்ச்சியாக பாலிவுட் மீது கவனம் செலுத்தி வந்த நிலையில் கோலிவுட்டில் படங்கள் நடிக்காமல் இருந்தார். இதனால் அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. அந்த நேரத்தில் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என பேச்சுடன் வெளியானது.

ஆனால் அப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது மட்டுமல்லாமல் வசூலிலும் பெரிய அடி வாங்கியது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது மும்பை ஆசையை கைவிட்டு விட்டு மீண்டும் கோலிவுட்டில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ரெட்ரோ திரைப்படம் பரபரப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டு ஒரு பக்கம் நடந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதால் ரெட்ரோ மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவு சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

இந்நிலையில் இப்பாடலை உருவாக்கும்போது மன்மதன் திரைப்படத்தின் என் ஆசை மைதிலியே பாடலை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் உருவாக்கியதாக படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் தெரிவித்துவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

Next Story