Retro Review: அடங்கம்மா இது ஜில்லா படத்தை காப்பி அடிச்ச மாதிரில இருக்கு… ரெட்ரோ எப்படி இருக்கு?

by Akhilan |   ( Updated:2025-05-01 01:04:35  )
Retro Review: அடங்கம்மா இது ஜில்லா படத்தை காப்பி அடிச்ச மாதிரில இருக்கு… ரெட்ரோ எப்படி இருக்கு?
X

Retro Review: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ்களை பேசும் முழுமையான திரை விமர்சனம் இதோ!

விதி வசத்தால் அப்பாவின் இறப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் சூர்யா. ஒரு கட்டத்தில் ரவுடிசம் செய்யும் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவை வளர்த்து வருகிறார். அவரை சூர்யா அப்பாவாக பார்த்தாலும் ஜோஜு ஜார்ஜ் அவரை அடியாளாக வைத்து வேலை வாங்கி வருகிறார்.

காதலிக்காக இதில் இருந்து விலக சூர்யா முடிவெடுக்க அப்போது தொடங்குகிறது அப்பா - மகன் மோதல். கடைசியில் யார் யாரை ஜெயிச்சார் என்பது குறித்த கதைதான் இந்த ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் எப்போதும் போலவே இப்படத்தில் இயக்குனராக சாதித்து இருந்தாலும் ஒரு இடத்தில் கோட்டை விட்டு விட்டார்.

எப்போதுமே அவருக்கு சாதாரண நடிகர்களை படு பயங்கரமாக இயக்கி சாதித்து விடுகிறார். ஆனால் ரஜினியை தொடர்ந்து சூர்யாவையும் பல இடங்களில் சரியாக காட்ட மிஸ் செய்து விட்டார்.

சூர்யா நடிப்பில் சொல்லவே தேவை தன்னுடைய மொத்த பெஸ்ட்டை போட்டு உழைத்து இருக்கிறார். பல இடங்களில் 90ஸ் சூர்யாவை பார்க்க முடிகிறது. கோபத்திலும் சூர்யாவின் நடிப்பு ஏ கிளாஸ். இப்படத்தில் இன்னொரு பிளஸ் ஜோஜு ஜார்ஜ் தான்.

ஏற்கனவே அவர் நடிப்பு அசுரத்தனம் என்பதால் இங்கு அதில் எந்த மிஸ்ஸிங்கும் இல்லை. கனிமா பூஜா ஹெக்டே எப்போதும் போல இல்லாமல் இப்படத்தில் ரசிகர்களை கொள்ளை அடித்து விட்டார். தமிழில் அவர் நடித்தால் பிளாப் என்ற பெயர் இதில் உடையலாம்.

என்னத்தான் கதை பழசு தான் என்றாலும் திரைக்கதையில் புதுமை காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். முதல் பாகம் பரபரப்பாக சென்றாலும் பிரச்னை இரண்டாம் பகுதியில் தோன்றி விடுகிறது. பல இடங்களில் எப்பப்பா பேசி முடிப்பீங்க என்னும் ரகத்தில் கடுப்பை தருகிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கவனிக்க வைக்கிறார். அதிலும் ஏற்கனவே பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் ஹிட் கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். கனிமா பாடல் சூப்பர்ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையும் கூட வாவ் சொல்ல வைக்கிறது.

இத்தனை இருந்தாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவின் அரைத்த மாவு என்பதால் போர் ரகம். கிட்டத்தட்ட கிளைமேக்ஸே யுகிக்கும்படியாக இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ரெட்டோக்கு இந்த பில்டப் ஓவருதான்!

Next Story