More
Categories: Cinema News latest news

என்னங்கடா ரோலக்ஸ்? நான் காட்டுறேன் பாரு.. ‘ரெட்ரோ’ படக்குழு வெளியிட்ட வீடியோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படம் ஒரு கேங்ஸ்டர் திரில்லர் படமாகத்தான் உருவாகியிருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் கார்த்திக் சுப்பராஜ். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல குறும்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் பீட்சா. பீட்சா படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படத்தில் விஜய் சேதுபதி லீடு ரோலில் நடிக்க இன்று வரை விஜய் சேதுபதிக்கு ஒரு அடையாளத்தை தந்த படமாக பீட்சா படம் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஜிகர்தண்டா படத்தை எடுத்தார்.

Advertising
Advertising

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படமும் பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. பீட்சா மற்றும் ஜிகர்தண்டா என வரிசையாக இரண்டு படங்களும் தொடர் வெற்றி பெற்றதால் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ் இணைந்தார்.

ரஜினியின் தீவிர வெறியனான கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட படத்தை எடுத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க தொடங்கினார். இப்படி தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து கார்த்திக் சுப்பராஜ் ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் ஆக்கிரமித்துக் கொண்டார். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களை தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் இவருடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் பெருசு என்ற படத்தை தயாரித்தார் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படத்தை எடுத்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் ரெட்ரோ படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டு கார்த்திக் சுப்பராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

அந்த வீடியோவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விதம் , சூர்யாவின் ரோல் என எல்லாமே மாஸாக இருக்கிறது. கடைசியில் விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் மாதிரியான சாயலும் சூர்யாவிடம் தெரிகிறது. சமீபத்தில்தால் லோகேஷின் பிறந்த நாளின் போது இப்படி மாதிரியான கூலி பட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இப்போது ரெட்ரோ பட குழுவும் அதே மாதிரியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/2D_ENTPVTLTD/status/1902215983743561917

 

 

Published by
Rohini

Recent Posts