எனக்கு படம் பண்ண சொல்லுங்க!..பண்ணவே முடியாது!..பாரதிராஜாவிடம் சவால் விடும் பிரபல நடிகை!..
தமிழில் மண்வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே, மண் வாசனை, கடலோர கவிதைகள், கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே ஆகிய படங்கள் காலத்தையும் தாண்டி பேசப்படும் திரைப்படங்காளாக இருக்கிறது.
கிராம படங்களை எடுப்பதில் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர். அரங்குக்குள் மட்டும் எடுக்கப்பட்டு வந்த சினிமா படப்பிடிப்பை கிராமத்திற்கும், வயல் வெளிக்கும் அழைத்து சென்றவர். பல நடிகர்,நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார்.
இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகள் பல பேர் சினிமாவிற்கு வரும் போது அவர்களுக்கு 16 வயசு அல்லது 17வயசு உடைய நடிகைகளாக தான் இருப்பார்கள். இன்று அவர்கள் அனைவரும் முன்னனி நடிகைகளாக வலம் வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ரேவதியும் அவர் பள்ளியில் படிக்கும் போது பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை. அவரிடம் இப்போ பாரதிராஜா உங்களை வைத்து படம் பண்ணினால் நடிப்பீங்களா என்று கேட்க அவரால் இப்போ என்னை வைத்து படம் எடுக்க முடியாது. 16, 18 வயதுடைய இளம் கதாநாயகிகளுக்கு தான் அவர் படம் பண்ண முடியும் என்று கூறினார்.