கமலுடன் நடிக்கும் போது ரேவதி பட்ட வேதனை!.. அழுது அழுது போய் நடித்த சம்பவம்.. அப்படி என்ன பண்ணாரு?..
தமிழ் சினிமாவில் 80களில் காவியப்படைப்பாக வந்த படம் ‘புன்னகை மன்னன்’. காதலுக்கு இலக்கணமாக அமைந்த இந்த படம் இன்றளவும் காதலின் பெருமையை பறைசாற்றுகின்றன. கமலின் அசாத்திய நடிப்பால் ஒரு மைல் கல்லை எட்டிய படமாக அமைந்தது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரேகா, ரேவதி நடிப்பில் இளையராஜா இசையில் பாலசந்தர் தயாரிப்பில் வெளியான புன்னகை மன்னன் ஒரு நடன இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை சுற்றி அமைந்த படமாக விளங்கியது. படத்திற்கு கூடுதல் ப்ளஸே பாடல் தான்.
இதையும் படிங்க : எப்படிப்பா? இவர வைச்சு அந்தப் படமா?.. இடியாப்பச் சிக்கலில் இருக்கும் வித்தியாசமான கூட்டணி..
இன்றளவும் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்தப் பாடலாக புன்னகை மன்னன் படத்தின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த படத்தில் ஒரு காட்சியில் கமலும் ரேவதியும் ஒரு மியூஸிக் மட்டும் ஆடுவது போன்று படமாக்கியிருப்பார்கள். அந்த ரிதம் செம ஹிட் ஆனது.
அதை படமாக்கிக் கொண்டிருக்கும் போது நடன இயக்குனராக பணிபுரிந்தவர் டான்ஸ் மாஸ்டர் கலா. கமலுக்கு சொல்லவே வேண்டாம். அந்த காட்சியில் செம ஸ்டைலாக ஆடியிருப்பார். அவர் ஆட்டத்தை பார்த்து ரேவதி இவருக்கு எப்படி நாம ஈடு கொடுக்க போகிறோம் என்று நினைத்தாராம்.
அதுமட்டுமில்லாமல் கலா மாஸ்டரிடம் என்னால் கண்டிப்பாக முடியாது என்று ரூமிற்குள் போய் அழுது விட்டாராம். அதன் பின் அவரை சமாதானம் படுத்தி டான்ஸ் சொல்லிக் கொடுத்து ஆட வைத்திருக்கிறார்கள்.