அந்தக் குளியல் சீன்!..ஆர்ப்பாட்டம் பண்ணியும் விடாமல் நடிகையை படம் பிடித்த பிரபல இயக்குனர்!..
பாரதிராஜா இயக்கத்தில் சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் உருவான படம் தான் மண்வாசனை திரைப்படம். இந்த படத்தில் நடித்த ஹீரோ,ஹீரோயினான பாண்டியன் , ரேவதி இருவருமே புதுமுகங்கள் தான்.
முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஷோபனாவை தான் அணுகியிருக்கிறார்கள். அவரும் சரி என சொல்ல படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போது எனக்கு பள்ளி தேர்வு இருக்கிறது என்னால் நடிக்க முடியாது என விலகி விட்டாராம். அதன் பிறகு தான் ரேவதி அறிமுகம் ஆகியிருக்கிறார்.
இதையும் படிங்கள் : சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கிய மக்கள் திலகம்!..அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?..
அந்த படத்தில் இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்ட பாடல்களாகவே அமைந்திருந்தன. குறிப்பாக பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.
அந்த பாடலில் நடிகை ரேவதி குளிக்கும் மாதிரியான சீனில் நடித்திருப்பார். கிராமம் சார்ந்த படம் என்பதால் கிராம மக்கள் அனைவரும் அந்த காலங்களில் மார்பு அளவு சேலையை கட்டி தான் குளிப்பார்கள், அதே போல் வரச் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. ஆனால் ரேவதி முடியாது என சொல்ல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறார். சரி ரேவதியின் பயத்தை போக்குவதற்காக சில பெண்களையும் குளிக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பின் தான் ஒப்புக் கொண்டாராம் ரேவதி. ஆனால் காட்சி எடுக்கும் போது மற்ற பெண்களையும் சேர்த்து தான் எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் கேமரா என்னை மட்டுமே ஃபோக்கஸ் பண்ணியிருப்பதை அதன் பிறகு தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.