ஒரே ஒரு kiss தான்! எல்லாம் போச்சு.. அப்படி மட்டும் நடிச்சிருந்தா? புலம்பிய ரேவதி..

Published on: July 1, 2023
revathi
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. மண்வாசனை என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார் ரேவதி. பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த ரேவதி எல்லா நடிகைகளை போலவே பாரதிராஜாவை பார்த்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறார். ஏனெனில் சரியாக நடிக்கவில்லை என்றால் பாரதிராஜா அடித்து விடுவார் என்பதை  கேள்விப்பட்டுதான் வந்திருக்கிறார்.

ஆனால் எப்படியோ அந்தப் படத்தில் நடித்து படத்தை பார்த்த பிறகு தான் ரேவதிக்கும் ஒரு பெரிய நம்பிக்கையே வந்திருக்கிறது. ஒரு நடிகையாக தன்னை அற்புதமாக பாரதிராஜா மாற்றியிருக்கிறார் என்று. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த ரேவதி இயல்பாகவே ஒரு கிரியேட்டரும்  கூட.

revathi1
revathi1

அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் புன்னகை மன்னன் திரைப்படம். அந்தப் படத்தில் நடிக்கும் போது முதலில் ரேவதி தயங்கினாராம். காரணம் கமல். ஏனெனில் கமலுடன் நடிக்க சில நடிகைகள் தயங்கியது உண்டு. முத்தக்காட்சி, கட்டிபிடிக்கும் காட்சி என கமல் அதில் தாராளமாக இருப்பார் என்றே சில நடிகைகள் அவருடன் நடிக்க தயங்கியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : என்னடா வாழ்க்கை வாழுற? பயந்துகிட்டுதானே வெளியே வரமாட்டேங்குற? அஜித்தை பந்தாடும் தயாரிப்பாளர்

குறிப்பாக புன்னகை மன்னன் திரைப்படத்தில் கூட ரேகா கதாபாத்திரத்தில் முதலில்  நடிக்க வேண்டியது ரேவதிதானாம். கதையெல்லாம் கேட்டுவிட்டு ஓகே செய்த ரேவதி ஒரு long kiss பண்ண வேண்டும் என்று சொன்னதும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இருந்தாலும் சும்மா கிஸ் அடிக்கிற மாதிரி நடித்தால் போதும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை நாங்களே எடிட் செய்து கொள்கிறோம் என்று சொல்லியும் மறுத்துவிட்டாராம்.

revathi2
revathi2

அதன் பிறகே ரேகா நடித்திருக்கிறார். ஆனால் படம் வெளியான பிறகு படத்தை பார்த்து ரேகாவிடம் ரேவதி வருத்தப்பட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். ஏனெனில் அந்தப் படத்தில் ரேகாவின் கதாபாத்திரம் கொஞ்சம் வெயிட்டான கதாபாத்திரமாக அமைந்திருக்கும். மக்கள் மத்தியில் நல்லா பதிந்த கதாபாத்திரமாகவும் அமைந்திருக்கும். அதனாலேயே ரேகாவிடம் அந்த கிஸ் சீன் மட்டும் இல்லைன்னா நான் நடித்திருப்பேன் என்று கூறினாராம் ரேவதி.

இதையும் படிங்க : கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிடுவாங்க.. நடிகையை உஷாராக டீல் செய்த சிவாஜி!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.