காதலுக்கு புது இலக்கணத்தை வகுத்த படம்!.. நாசம் பண்ணிராதீங்க!..கெஞ்சும் பிரபல நடிகை!..
தமிழ் சினிமாவில் காதலின் அணுகுமுறைகளை அந்த காலத்தில் இருந்தே நமக்கு காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் காதல், பேசாமல் இருக்கும் காதல், பார்த்து கொண்டே காதல், பார்க்காமல் காதல் என எல்லாவித உணர்வுகளையும் படத்தின் மூலமாக நாம் ரசித்துக் கொண்டு வருகிறோம்.
ஆனால் 80களில் காதலுக்கு ஒரு வித்தியாசமான இலக்கணத்தை வகுத்தவர் இயக்குனர் மணிரத்னம். அவரது படைப்பில் ஒரு காதல் காவியமாக வெளிவந்த படம் தான் மௌன ராகம் திரைப்படம். இந்த படத்தில் நடிகர் கார்த்திக், நடிகர் மோகன் நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருப்பர்.
இவர்கள் மூவருக்கும் இருக்கும் காதலை உணர்வு பூர்வமாக சித்தரித்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். பார்ப்பவர்களுக்கே அந்த வலிகளை பார்க்கும் போது காதலிக்க தோன்றும். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளை வடிவமைத்திருப்பார் மணிரத்னம்.
இந்த நிலையில் அந்த படத்தில் நடிகை ரேவதியிடம் ஒரு ரசிகர் மௌன ராகம் படத்தை மறுபடியும் எடுத்தால் நீங்களும் கார்த்தியும் நடித்த கதாபாத்திரத்தில் இப்ப உள்ள நடிகர்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்க அதற்கு ரேவதி,அதை நீங்கள் தான் சொல்லவேண்டும் என்று கூறி மேலும் அந்த படம் ஒரு பொக்கிஷம். தயவுசெய்து அந்த படத்தை தொடாமல் இருப்பதே நல்லது என்று கூறினார்.