Cinema History
பாரதிராஜாவிடம் சிக்கி சின்னாபின்னமான பாண்டியன்!.. ஷாக் தகவலை சொன்ன ரேவதி!. இவ்வளவு நடந்திருக்கா!..
தமிழ்த்திரை உலகில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து கவர்ச்சி பக்கம் ஒதுங்காமல் இருந்த நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் முக்கியமானவர் நடிகை ரேவதி. இவர் துரு துரு என்று நடிப்பது பேசுவது என இவருக்கு என்று ஒரு சில தனித்துவமான அடையாளங்கள் உண்டு.
இவர் நடித்த புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், புன்னகை மன்னன், ஒரு கைதியின் டைரி, மௌனராகம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு செம மாஸாக இருந்தன. கேரளாவில் இருந்து தமிழகம் வந்த இவர் எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசி நடிக்கிறார் என்பது ஆச்சரியம். இவருக்கு என்று தாய்மார்கள் மத்தியில் நல்ல பெயர் எப்போதும் உண்டு. அவரது படங்கள் என்றாலே கவர்ச்சி எதுவும் இருக்காது என்று நம்பி தியேட்டர் பக்கம் போவார்கள்.
பாரதிராஜாவின் மண்வாசனை தான் ரேவதிக்கு முதல் படம். பாண்டியனுக்கும் இதுதான் முதல் படம். இரண்டு பேருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுப்பதற்குள் பாரதிராஜா ஒரு டியூசனே வைத்து விட்டாராம். காட்சிக்கு காட்சி அவர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். சாதாரணமாக நடிப்பு சரியில்லை என்றால் நடிகர் என்றும் பாராமல் கை ஓங்கி அடித்து விடுவாராம் பாரதிராஜா.
இதையும் படிங்க... ரஜினியை வச்சி படம் எடுக்குறியா?!. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
அந்த அடிக்கு பாண்டியனும் தப்பவில்லை என்று ரேவதியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாராம். இந்தப் படத்திற்காக ரேவதி சொந்தக்குரலில் பேசி நடித்தாராம். ஒரு வாரம் டப்பிங் பேசியுள்ளாராம். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் ரேவதி. இவருக்கு தமிழகக் கிராமங்கள் எப்படி இருக்கும் என்றே தெரியாது. தமிழும் அந்த அளவு தெரியாது. ஆனாலும் படத்தில் அசத்தலாக நடித்துத் திறமையைக் காட்டியுள்ளார் என்றால் அது பெரிய விஷயம் தான்.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஆர் எழுத்தில் ஆரம்பிக்கும் நடிகைகளில் ரேவதி 15 ஆண்டுகளாகத் தாக்குப் பிடித்துவிட்டார். அவர் கடைசியாக பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த படம் தாஜ்மகால்.