Connect with us

தக் லைஃப் கேங்ஸ்டர் படமா? பிட்டுப்படமா? நம்பி போனா ஜிங்குச்சா தான்..! புளூசட்டைமாறன் விளாசல்

latest news

தக் லைஃப் கேங்ஸ்டர் படமா? பிட்டுப்படமா? நம்பி போனா ஜிங்குச்சா தான்..! புளூசட்டைமாறன் விளாசல்

தக் லைஃப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

படத்துக்கு முதல்ல ஒரு டீசர் வெளியிட்டாங்க. அதுல இது தக்கீஸ் பத்தின வாழ்க்கையைத் தான் படமா எடுத்துருக்காங்க. குற்றப்பரம்பரை பத்தின கதையைத் தான் படமா எடுத்துருக்காங்கன்னு சோஷியல் மீடியாவுல கிளப்பி விட்டுட்டு இருந்தாங்க.

படம் ரிலீஸ் நேரத்துல இது வழக்கமான கேங்ஸ்டர் படம்னு சொல்லிருந்தாங்க. படத்தோட ஆரம்பத்துல 2 பெரிய கேங்ஸ்டர் கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் பண்ண வாராங்க. அதுல ஒண்ணு கமல். இன்னொன்னு சேட். இதுல சேட் போலீஸ் இன்ஃபார்மரா இருந்துருக்காரு. கமல் நம்ம மாட்டிக்கிட்டோம்னு அலர்ட்டா ஆகுறாரு. அப்போ சூட் பண்றாங்க.

அதுல சின்ன வயசு சிம்புவோட அப்பாவும் கொல்லப்படுறாரு. அங்கே இருந்து சிம்புவை வச்சித் தப்பிச்சிப் போறாரு. நம்ம உயிரைக் காப்பாத்துனது சிம்புன்னு அவரை வளர்க்குறாரு. அப்போ சிம்பு எனக்கு ஒரு தங்கச்சி இருக்குன்னு சொல்றாரு. சின்னக்குழந்தை காணலன்னா அனாதை ஆசிரமம், ஸ்கூல், காலேஜ்ல தேடணும். இவரு ஊருல இருக்குற ரெட் லைட் ஏரியா, பார்ல போய் தேடுறாரு. அங்கே போயிட்டு நீ சந்திராவான்னு பார்க்குற பொம்பளைக்கிட்ட எல்லாம் கேட்குறாரு.

நான் சந்திரா கிடையாது. இந்திரான்னு திரிஷா சொல்றாங்க. உடனே சந்திரா இல்லன்னாலும் பரவாயில்ல. இந்திராவா இருந்தாலும் வச்சிக்கிறேன்னு கமல் தள்ளிட்டு வந்துடுறாரு. உடனே சிம்பு எனக்குல்ல இந்திரா சொந்தம். நீ எப்படி வச்சிக்கலாம்னு இந்திராவை அழைச்சிட்டு வந்துடுறாரு. இப்ப கமலுக்கும், சிம்புவுக்கும் பிரச்சனை வந்துடுது. இது அஞ்சறைக்குள்ள வண்டி மாதிரியும், மாமனாரின் இன்ப வெறி மாதிரியும் பெரிசா வந்துடுது.

என்னடா கேங்ஸ்டர் படம்னு சொன்னாங்க. இது பிட்டுப்படத்தை மாதிரி இருக்கேன்னு கேட்கலாம். படமும் அப்படி அவங்க எடுக்கல. கேங்ஸ்டர் என்ன தான் தொழில் செய்றாங்கன்னு தெரியல. சோத்துக்கு என்ன செய்றாங்கன்னு தெரியல.

ஜெயிலுக்குப் போனா கூட ஜெயிலர் வெளியே போயிடுறாரு. அங்கே திரிஷா கூட கும்மாளம் அடிக்கிறாரு. இந்த வயசுல எல்லாருக்கும் பிபி வர்ற மாதிரி நான் இதுல அடிமைன்னு சொல்றாரு. ஒரே ரொமான்ஸ் பண்றாரு. இதுல எங்கேடா கேங்ஸ்டர் கதை இருக்கு?

அப்புறம் கமலை அடிச்சி தொவைச்சிடுறாங்க. அப்புறம் வயசான பிறகு கராத்தே எல்லாம் கத்துக்கிட்டு அடிச்சி துவைக்கிறாரு. படம் முடியும்போது விண்வெளி நாயகான்னு சொல்றாங்க. அதுக்கு விண்வெளி நாயகனுக்கும் என்ன சம்பந்தம்?

புலி மார்க் சீயக்காய்த்தூள்ல புலிக்கும், சீயக்காய்த்தூளுக்கும் என்ன சம்பந்தம்? படத்துல என்னதான் கேங்ஸ்டர்னு தெரியல. சிம்பு தான் ஷார்ப்னு சொல்றாங்க. என்ன தான் ஷார்ப்பான வேலையை செய்றாருன்னு தெரியல. கடைசில மணி சார், கமல், சிம்புன்னு எல்லாருக்கும் கம்பேக்னு சொல்றாங்க. காலம் பூரா கம்பேக் தான். நம்பி போனீங்க ஜிங்குச்சா தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top